புவி, கோள்கள் போன்ற விண் பொருள்கள் நீள் வட்டப் (elliptic) பாதைகளில் சூரியனைச் சுற்றுகின்றன என்று கெப்ளர் நிறுவினார். வால் விண் மீன்களில் பரவளையப் பாதைகளிலும் செல்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒரு குவி மையத்தில் சூரியன் இருக்கும். சுழற்சிப் பாதையில், விண் பொருள்கள் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிலை, சூரிய அண்மை நிலை (perihelion) எனப்படும். புவியும், சூரியனும் அண்மை நிலையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 3ஆம் நாள் இருக்கும். மைய அகற்சி ‘e’ (eccentricity) மிக, மிகக் குறைவாக உள்ளமையால், நீள் வட்டப் பாதைகள், வட்டப் பாதைகளாகவே தோற்றமளிக்கும். நீள் வட்டத்தின் பேரச்சு (major axis) 2a எனவும், சிற்றச்சு 2b எனவும் கொண்டால், e இன் மதிப்பு \!\sqrt{1 - \frac{b^2}{a^2க்குச் சமமாகும். சூரியனிடமிருந்து அண்மைப் புள்ளியின் தொலைவு a (1-e) ஆகும். —பங்கஜம் கணேசன்