குழு

kuḻu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பலர் சேர்ந்த கூட்டம் (அணி), அல்லது பல பொருள்கள் சேர்ந்த ஒரு திரள். — group, team, committee
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழு)
2.
கருத்தாலோ, பிற பண்புகளாலோ, உறவாலோ அல்லது ஏதோ ஓர் ஒற்றுமை கருதி ஒன்றாய் இருக்கும் அல்லது இயங்கும் ஒரு மக்கள் கூட்டம். பண்புகள் ஒன்ற்றுமையாலோ அல்லது வேறு காரணங்களுக்காக சேர்த்து எண்ணத்தக்க பல்பொருள் திரள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழு)
3.
பெண்கள் கூட்டம், மகளிர் சேர்ந்து இருக்கும் கூட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழு)
4.
அடங்காமை (குழுக்காலி என்றால் கட்டுக்கு அகப்படாது மாடு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழு)
5.
கூட்டம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 142)
6.
கூட்டம், (குறள் 735).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 117)
7.
தொகுதி, கூட்டம். எ-டு செறியப் பெற்றேன் குழுவில் சென்று (திப99) பா.ஐம்பெருங்குழு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 104)
8.
1. பல உறுப்புகள் இணைந்த ஒரு முழுமை. ஒரு தரவுத்தள அறிக்கையில் குறிப் பிட்ட ஏடுகளின் தொகுதி. 2. ஒரு படவரைவு மென்பொருளில் வரைகின்ற ஒரு படத்தில் பல்வேறு உருப்பொருள்களை ஒரு தொகுதியாகச் சேர்ப்பதையும் குழு என்பர். 3. பல் பயனாளர் இயக்க முறைமையில் சில குறிப்பிட்ட பயனாளர்களை இணைத்து ஒரு குழுவை உரு வாக்க முடியும். சலுகைகளையும் உரிமைகளையும் ஒரு குழுவுக்கென வரையறுக்க முடியும். அக்குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் அந்தச் சலுகைகளையும் உரிமைகளையும் பெறுவர் — group
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 670)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t684fnf2/

தமிழ்
“குழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t684fnf2/
APA
Oliyon Research. (2026). குழு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/t684fnf2/
MLA
"குழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t684fnf2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment