அரங்கநாத முதலியார்
araṅkanāta mutaliyār
செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளூரை அடுத்த பூண்டி என்னும் ஊரில் சைவ வேளாள மரபில் தோன்றியவர்.
செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளூரை அடுத்த பூண்டி என்னும் ஊரில் சைவ வேளாள மரபில் தோன்றியவர். தந்தை சுப்பராய முதலியார். சென்னைப் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும் அரசினர் கல்லூரியிலும் பயின்றார், நுண்ணறிவும் நினைவாற்றலும் மிக்கவர். கணிதத்தில் பி.ஏ.பட்டம் பெற்ற இவர் கும்பகோணம் கல்லூரியில் கணித ஆசிரியராக இருந்தார். பின்னர்ச் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த போது ஆங்கிலம் முதலிய பாடங்களையும் கற்பித்தார். கணிதத்தில் எம்.ஏ, பட்டமும் பெற்றார். அரசினர் இவருக்கு இராவ்பகதூர் பட்டம் வழங்கினர்.
இவர் சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். தொழுவூர் வேலாயுத முதலியாரிடமும் திருமணம் சுப்பராய முதலியாரிடமும் தமிழ் கற்றார். சதுரங்க விளையாட்டில் திறமையுமிக்கவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் ‘செரிப்பாக’ (Sheriff) இருந்தார். இவர் செய்த கச்சிக்கலம்பகம், ஞானப்பிரகாசர் இயற்றிய கச்சிகலம்பகத்தின் வேறாகும். இந்நூல் சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்கசாமிகள் தலைமையில், சென்னைத் தொண்டை மண்டலம் உயர்நிலைப் பள்ளியில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
அரங்கநாத முதலியார்
இவர் வித்துவான் தியாகராசச் செட்டியாரிடத்தில் மதிப்புடையவர். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்களின் சிந்தாமணிப் பதிப்புக்குப் பொருளதவி செய்தவர்களுள் இவரும் ஒருவராவார்.த.கு.மு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 614)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t4r5v36n/
தமிழ்“அரங்கநாத முதலியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/t4r5v36n/APA
Oliyon Research. (2026). அரங்கநாத முதலியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t4r5v36n/MLA
"அரங்கநாத முதலியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/t4r5v36n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment