சேமிப்பகப் பாதுகாப்பு

cēmippakap pātukāppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு எதிராக பாதுகாப்பு அளிப்பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதிகளால் தானாகவே செயல்படுத்தப்படுகிறது. நினைவகப் பாதுகாப்பு (Memory Protection) என்றும் அழைக்கப்படுகிறது. storage tube : சேமிப்பகக் குழாய் : தகவல் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் வேறொரு சமயத்தில் வெளியே எடுக்கப்படுகின்ற எலெக்ட்ரான் குழாய். முதல் தலைமுறைக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டது. store : இருப்பகம்; சேமிப்பகம்; கிடங்கு; தேக்ககம் ; சேமிப்புப் பகுதி : 1. சேமிப்பகத்தின் பெயர். 2. சேமிப்பகத்தில் வைத்தல். store and forward : சேமித்து செலுத்து; இருத்தி அனுப்பு : தேக்கித் திருப்பல் : தகவல் தொடர்புப் பிணையங்களில் பயன்படுத்தப்படும் செய்தியனுப்பு நுட்பம். செய்தியானது தற்காலிகமாக ஒரு திரட்டுநிலையத்தில் இருத்திவைக்கப்பட்டுப் பிறகு உரிய இடத்துக்கு அனுப்பிவைக்கப்படும். store, bulk : மொத்தச் சேமிப்பு. store, core : உள்ளகச் சேமிப்பு. stored programme computer : நிரல் தொடர் சேமிக்கப்பட்ட கணினி : உள்ளார்ந்த சேமிப்பு நிரல்களின் தொடர்களைச் செயல்படுத்தும் திறனுள்ள கணினி. நிரல்களில் கூறியுள்ளபடி தரவுகளை மாற்றும் திறனுள்ளவை. stored programme concept : சேமிக்கப்பட்ட நிரல்தொடர் கோட்பாடு; சேமிப்புச் செயல் முறைக்கோட்பாடு : கணினியின் உள்சேமிப்பகத்திற்குள் நிரல்களும், தகவல் மதிப்புகளும் சேமிக்க வருவது பற்றிய நிரல்களைத் தரும் கணினி. நிரல்களை விரைவாக அணுகி விரைவாக மாற்றமுடியும். 1945இல் ஜான்வோன் நியூமென் இக்கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். இலக்கவியல் கணினியின் முக்கிய தன்மை இதுவே. stored programme control : சேமிக்கப்பட்ட நிரல்தொடர் கட்டுப்பாடு : வோன் நியூமென் என்ற கணினி விற்பன்னரால் உருவாக்கப்பட்ட கணினிக் கொள்கை. 1940களில் இருந்த கணினிகள் குறிப்பிட்ட வேலைக்காக உருவாக்கப்பட்டவை என்பதால் அவைகள் மாற்ற முடியாதவை என்பதை வோன் நியூமென் உணர்ந்தார். மாற்றக்கூடிய நிரல்களை சேமிக்கக் கூடியவைகளாக கணினியால் முடியும் என்பதால் பல்வகையான பணிகளைச் செய்ய கணினியால் முடியும் என்று அவர் விளக்கினார். கணினி மென்பொருளின் தோற்றம் இதுதான். stored programme machine : பதிவான நிரல் தொடர் எந்திரம். சேமிப்பு நிரல் தொடர் எந்திரம். STP : எஸ்டீபீ : உறையிட்ட முறுக்கிணை என்று பொருள்படும் Shielded Twisted Pair என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சுருள் மற்றும் செப்பு இழைகளால் பின்னப்பட்ட உறையுள்ள வடத்தினுள் ஒன்று அல்லது மேற்பட்ட முறுக்கிணைக் கம்பிகள் இருக்கும். கம்பிகள் முறுக்கப்பட்டிருப்பதால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மின்இடையூறு இருக்காது. வெளியிலிருந்து வரும் இடையூறுகளிலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு உறைகள் பயன்படுகின்றன. எனவே நீண்ட தொலைவு, அதிவேக தரவு பரிமாற்றத்துக்கு இவ்வகை வடங்கள் உகந்தவை. straight line code : நேர்வரிக் குறியீடு : ஒரு நிரல் தொடர் வரிசையை ஒவ்வொரு தடவை யும் திரும்ப வரும்போது தெளிவாக எழுதி திரும்பச் செய்யச்செய்தல். நேர்வரிக் குறியீடு அமைத்தால் குறைந்த இயக்க நேரமும் அதிக சேமிப்பக இடமும் (இதற்குச் சமமான லூப் குறியீடு அமைப்பதைவிட) கிடைக்கும். தேவைப்படும் இடமும் ஒரு மாறிலியைத் திரும்பத்திரும்ப பல தடவைகள் குறியீடு அமைப்பதுமே இதனைச் செய்வதில் உள்ள தடைகள். strategic information systems : உத்திமிக்க தகவல் அமைப்புகள் : சந்தையால் மற்ற போட்டியாளர்களைவிட ஒரு நிறுவனத்திற்கு உத்தி மூலமான அனுகூலத்தை அளிக்கும் போட்டிப் பொருட்களையும் சேவைகளையும் அளிக்கும் தகவல் அமைப்புகள். வணிக முன்னோடித் தன்மை செயல்பாட்டுத்திற்ன் அதிகரிப்பு மற்றும் ஒரு நிறுவனத்தின் உத்திமிக்க தகவல் மூலாதாரங்களைப் பயன்படுத்துவதையும் இது குறிப்பிடுகிறது. stream : தாரை; பாயல். stream cipher : தாரை மறையெழுத்து : மாறா நீளமுள்ள திறவியைப் பயன்படுத்தி வரம்பிலா நீளமுள்ள தரவு தொடரை மறையாக்கம் செய்யும் வழி முறை. streamer : தொடரோட்டம் : ஒவ்வொரு தனித்தனி தரவு தொகுதி களுக்கும் இடையில் நின்று துவங்குவதற்குப் பதிலாக தொடர்ச்சியாக அதிகவேகத்தில் இயங்கும் நாடாப் பெட்டி. streaming : தாரையாக்கம் : காந்த நாடாச் சேமிப்புச் சாதனங்களில், நாடாவின் நகர்வைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு குறைந்த விலை நுட்பம். நாடா இடையகங்கள் நீக்கப்பட்டு நகர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக நாடா இயங்கத் தொடங்குவதும் நிற்பதும் மெதுவாக நடைபெறுகிறது. எனினும் இதனால் மிகுந்த நம்பகத் தன்மையான் சேமிப்பும், தரவு பெறுகையும் இயலக் கூடியதாகியுள்ளது. ஏதேனும் ஒரு பயன்பாட்டுக்கு அல்லது கணினிக்கு தொடர்ச்சியாக தரவுகளை வழங்க நேர்ந்தால் இம்முறை மிகவும் உகந்ததாகும். streaming tape drive : நாடா இயக்கி ஓட்டம் : தொடர் நாடா இயக்கியைப்பிடித்துக் கொண்டிருக்கும் பெட்டி நிலைத் தட்டு இயக்கிகளுக்கு மாற்று ஏற்பாடாகவே இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. stream-oriented file : சரம் சார்ந்த கோப்பு : தரவு கோப்பைவிட மேலும் திறந்தமுறையில் வடிவமைக்கக்கூடிய சொல் ஆவணம் அல்லது இலக்கமுறை குரல் கோப்பு போன்ற கோப்பு. சொல் மற்றும் குரல் ஆகியவை தொடர்ச்சியான எழுத்துச் சரங்கள். ஆனால் தரவுத் தள பதிவேடுகள் நிலையான அல்லது ஒரளவு ஒழுங்கான படிவத்தில் திரும்பவரும் வடிவமைப்புகள். street price : சில்லறை விற்பனை விலை : ஒரு மென் பொருள் அல்லது வன்பொருள் தயாரிப்புக்கு நுகர்வோர் செலுத்தும் உண்மையான சில்லறை விற்பனை விலை. பெரும்பாலான வேளைகளில் பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விற்பனை விலையைவிடக் குறைவாகவே இருக்கும். STRESS : ஸ்ட்ரெஸ் : Structural Engineering System Solar என்பதன் சுருக்கம். கட்டுமானப் பொறியியல் சிக்கல்களை தீர்க்க உதவும் ஒரு சிக்கல் சார்ந்த மொழி. stress test : தகைவுப் பரிசோதனை அழுத்தச் சோதனை : ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் அமைப்பின் செயல்பாட்டெல்லைகளை, உச்ச அளவுத் தரவுகள் அல்லது அதிகப்படியான வெப்ப நிலை போன்ற அதீத சூழ்நிலைகளில் பரிசோதனை செய்தல். stress testing : அழுத்தம் சோதித்தல்; கிறுக்கச் சோதனை : தரவுகளில் துல்லியக் கோளாறுகள் மற்றும் அசாதாரண தரவு தொகுதிகள் இருந்தாலும் கணினி அமைப்பு அல்லது நிரல் தொடர் தொடர்ந்து நம்பகமாக இயங்கும் என்பதை சோதனை இயக்கத்தின் மூலம் உறுதி செய்தல். strike through : குறுக்குக் கோடிடல் தேர்ந்தெடுக்கப் பட்ட உரைப்பகுதி மீது ஒன்று அல்லது மேற்பட்ட கோடுகளைப் போடுதல். பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்டதைக் குறிப்பதற்காக இவ்வாறு உரை வரிகளின் மீது குறுக்குக் கோடு போடப்படும். string : தொடர்சரம் ; சரம் : ஒரு தனி தரவு தொகுதியாகக் கருதப்படும் துண்மிகள் அல்லது எழுத்துகளின் தொடர் வரிசை. — storage protection
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1385)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t4eu42j4/

தமிழ்
“சேமிப்பகப் பாதுகாப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t4eu42j4/
APA
Oliyon Research. (2026). சேமிப்பகப் பாதுகாப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t4eu42j4/
MLA
"சேமிப்பகப் பாதுகாப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t4eu42j4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment