சூட்டுக்கோலால் அழித்தல்
cūṭṭukkōlāl aḻittal
மரு வளர்ச்சி போன்ற வேண்டாத திசுக்களையும் சில நோய் நிலைகளையும், மின்சாரத்தால் சூடேற்றப்பட்ட கம்பியைக் கொண்டு அழிக்கும் முறை, சூட்டுக் கோலால் அழித்தல் (cauterization) எனப்படும்.
மரு வளர்ச்சி போன்ற வேண்டாத திசுக்களையும் சில நோய் நிலைகளையும், மின்சாரத்தால் சூடேற்றப்பட்ட கம்பியைக் கொண்டு அழிக்கும் முறை, சூட்டுக் கோலால் அழித்தல் (cauterization) எனப்படும்.
அறுவை மருத்துவத்தின் போது, (குறிப்பாக, மூளைப் பகுதியில்) குருதிக் குழாய்களிலிருந்து ஏற்படும் குருதி ஒழுக்கைத் தடுக்கவும், சூட்டுக் கோலால் அழிக்கும் முறையைப் பயன்படுத்தலாம். சூட்டுக் கோல் வெளியிடும் வெப்பம், திசுக்களின் புரதத்தை மாற்றமடையச் செய்கிறது; திசுக்களின் பெரும் பகுதியைக் குருதி உறைவு அடையச் செய்றது; இதனால் குருதி ஒழுக்கு நிறுத்தப்படுகிறது.
சூட்டுக் கோல் அழிப்பு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் சில அறுவை மருத்துவத்தைத் தவிர்க்க முடிகிறது என்றாலும், இம்முறை சில விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தும். அவை, சூட்டுக் கோலால் அழித்த பகுதியில் சில சமயம் குருதி ஒழுக்கு ஏற்படக் கூடும், சில பொது உணர்விழப்பு மருந்துகளைச் செலுத்தும் போது, இம்முறையைப் பயன்படுத்தினால், உணர்விழப்பு மருந்துகள் தீப்பற்றி எரியக் கூடும்,
சூட்டுக்கோல் அழிப்பு பயன்படும் சில நோய் நிலைகள்
கருப்பைக் கழுத்து நெடு அழற்சி (Chronic cervicitis) இந்நோய் நிலையில் சூட்டுக் கோல் அழிப்பு சிறந்த பயனளிக்கிறது. சூட்டுக் கோலின் முனையைச் சிவப்பாகும் வரை சூடாக்கிய பின்னா், கருப்பையின் கழுத்துப் பகுதியைச் சுற்றி 5–6 முறை வைக்க வேண்டும், இதனால், பாதிக்கப்பட்ட கருப்பையின் கழுத்துத் திசுக்கள் இரு வாரங்களில் நார்த் திசுவாக்கம் (cicatrization) அடைந்து விடுகின்றன. அப்பகுதிகளில் சில சமயம் குருதி ஒழுக்கு ஏற்படக் கூடும். ஆயினும், குருதி ஒழுக்கு கடுமையாக இருப்பதில்லை. சில மணி நேரத்திற்குப் பின் நின்று விடும். எனவே, சூட்டுக் கோல் அழிப்புக்குப் பின் குருதி ஒழுக்கு ஏற்பட்டால், அது பற்றிய அச்சத்தை நோயாளியிடமிருந்து நீக்க வேண்டும்.
தோல் நோய்கள். தோலில் சூட்டுக் கோலைப் பயன்படுத்தும் போது, தோலை அதிகமாக அழுத்தக் கூடாது. ஏனெனில், அப்பகுதியில் நிலையான தழும்பு ஏற்பட்டு விடக் கூடும். கீழ்க் காணும் தோல் நோய்களில் சூட்டுக் கோல் அழிப்பு மருத்துவம் பயனுள்ளதாக உள்ளது.
மருக்கள். தலை, கன்னம், சிலேட்டுமப் படலத் தோல் சந்தி (mucocutaneous junction) ஆகிய பகுதிகளில் தோன்றும் பல மருக்களை (multiple warts) அகற்ற சூட்டுக் கோல் அழிப்பு மருத்துவம் பயன் படுகிறது.
ஸ்பைடர் நேவி (spider naevi). தோல் மீது சிலந்தி வடிவில் ஏற்படும் இவ்வளர்ச்சியின் மையத்தில், சூட்டுக் கோலை ஒரு நொடி மட்டும் செலுத்தினாலே, சிறந்த பயனளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நிறமற்ற விழி முன் படலப் புண் (corneal ulcer). பொதுவாக இந்நோய்க்கு சல்ஃபனமைடு, அட்ரோப்பின் கண் சொட்டு மருந்து பெரும் பயன் தரும். ஆயினும், விழி முன் படலப் புண் கடுமையாக இருந்தால், சூட்டுக் கோல் அழிப்பு மருத்துவம் தேவைப்படலாம்.
விழி இமை விளிம்பு வெளியிழப்பு (ectropion). இந்நோய் நிலையில், கண் இமையின் விளிம்பு, கண் குழியிலிருந்து வெளிப் பக்கமாக இழுக்கப்பட்டுக் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டேயிருக்கும். இதற்கு, சூட்டுக் கோல் அழிப்பு மருத்துவம் பயன்படும்.
பெண் இனப் பெருக்க வெளி உறுப்புப் பகுதியில் ஏற்படும் தண்டுக் கழலை (pappilomata) என்னும் மருக்களை அகற்ற, தாது எண்ணெயில் கரைந்த போடோஃபைலின் மருந்தை 25% கரைசலாக ஒரே
முறை தடவினாலே பெரும்பான்மையோரிடம் இம்மருக்கள் 2–3 நாளில் மறைந்து விடுகின்றன. போடாஃபைலினால் அழிக்க முடியாத மருக்களைச் சூட்டுக் கோல் மூலம் அகற்றலாம். —மு. துளசிமணி நூலோதி. Schwartz, et.al., Principles of Surgery, Fourth Edition, McGraw Hill International Book Co., Singapore, 1984.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 605)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t45ttn5g/
தமிழ்“சூட்டுக்கோலால் அழித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/t45ttn5g/APA
Oliyon Research. (2026). சூட்டுக்கோலால் அழித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t45ttn5g/MLA
"சூட்டுக்கோலால் அழித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/t45ttn5g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment