துறை

tuṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பாடத்தின் உட்பிரிவு.
உயிரியல் என்ற பாடத்தின் உட்பிரிவாகத் தாவரவியல், விலங்கியல் போன்ற பிரிவுகளைச் சொல்லலாம்.
சமயத்துறை, ஆங்கிலத்துறைத்தலைவர் (head of english department).
வீரராயவர் புரிவதாண்மைத் துறையென லாயிற் றன்றே (கம்பரா. வாலி. 82)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
2.
கரையோரத்தில் நிற்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு.
நீர்த்துறை,துறைமுகம்
தண்புனற் றுருத்தியுந் தாழ்பூந் துறைகளும் (மணி. 1, 65)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
3.
இடம்.
அத்துறை யமலனும் (ஞானா. 48, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
4.
நியாயவழி.
துறை திறம்பாமற் காக்கத் தோன்றினான் (கம்பரா. வாலி. 74). (தொல். பொ. 56, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
5.
உபாயம்.
துறையறிந்து காரியம் நடத்துகிறான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
6.
கடற்றுறை.
துறை வளர் நாட்டொடு (சீவக. 1618)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
7.
கடல்.
துறைமுற்றிய துளங்கிருக்கை (மதுரைக். 85)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
8.
ஆறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
9.
வண்ணானொலிக்கும் இடம்.
துறைச்செல்லா ளூரவராடை கொண் டொலிக்குநின் புலைத்தி (கலித். 72, 13)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
10.
சபைகூடுமிடம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
11.
சாஸ்திரம்.
மற்றைத் துறைகளின் முடிவும் (கம்பரா. வாலி. 132)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
12.
அகமும் புறமும் பற்றிய தமிழ்ப் பொருட்கூறு.
தீந்தமிழின் றுறைவாய் நுழைந்தனையோ (திருக்கோ. 20)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
13.
ஒழுங்கு வேதந் துறைசெய்தான் (குமர. பிர. சிதம்ப. செய். 13)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
14.
பாவினத்தொன்று. (காரிகை, செய். 6, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
15.
இசைப்பாட்டு வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
16.
வரலாறு.
துறை யெனக் கியாதெனச் சொல்லுசொல்லென்றான் (கம்பரா. மீட்சி. 255)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
17.
நீர்த்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறை)
18.
நூல், வழி, கடற்கரை, ஒழுங்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 227)
19.
ஒரு கருவியில் பிற சாதனங்களைப் இணைப் பதற்கான பொருத்துவாய். — port1
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1133)
20.
காந்த வட்டில் தகவல் சேமிப்பை அமைத்தல் — sector
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 195)
21.
புலம் — department
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 53)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t396bfgq/

தமிழ்
“துறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t396bfgq/
APA
Oliyon Research. (2026). துறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t396bfgq/
MLA
"துறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t396bfgq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment