அந்தரத்தாமரை
antarattāmarai
அந்தரத்தாமரை நீர்ப்பூண்டு; வேர் ஆழமாகப் பதியாதது.
அந்தரத்தாமரை நீர்ப்பூண்டு; வேர் ஆழமாகப் பதியாதது. கிளைகள் இலைக்காம்பு போலத் தோன்றும். ஒவ்வொரு கிளையும் ஓர் இருதய வடிவமுள்ள இலையில் முடியும். பூக்கள் சிறியவை ; வெண்மை நிறமுள்ளவை; நீண்ட காம்புள்ளவை ; கொத்தாக இருக்கும். இலைக்கு ஒரு அங்குலம் கீழே கிளையில் பூங்கொத்து இருக்கும். அதே யிடத்தில் கிளையிலிருந்து வேர்களும் உண்டாகும். இந்தச் செடி குளங் குட்டைகளில் சாதாரணமாக உண்டு.
குடும்பம் : ஜென்ஷியனேசீ (Gentianaceae).
இனம் : லிம்னான் திமம் கிரிஸ்டேட்டம் (Limnan- themum cristatum).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 126)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sz9epmrs/
தமிழ்“அந்தரத்தாமரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sz9epmrs/APA
Oliyon Research. (2026). அந்தரத்தாமரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sz9epmrs/MLA
"அந்தரத்தாமரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sz9epmrs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment