ஒட்டு

oṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரப்பட்டை, படை வகுப்பு, சபதம், நட்பு, பந்தயம், ஒளிப்பிடம், இணைப்பு, சார்பு, ஆணை, ஒப்பு, ஓரம்
2.
முதல்வன் உயிர் உணர்வு, புலன் உணர்வு ஆகிய இரண்டும் ஒப்பு விரவி நிற்பவன். இருப்பினும், உயிர் உணர்வு போலப் புலன் உணர்வு பரவுகை இன்றி, ஏகதேச விளக்கமாக உள்ளது. உயிர் உணர் விற்குரிய அம்மேம்பாடு, அப்பரவும் உணர்வை இழந்த பசுத்தத்துவம் உடையாரிடம் அறியப்படாதது. ஆயினும், அவர்தம் பசுத் தத்துவம் நீங்கிய சிவப்பேற்றின் கண் அறியப்படும் என்பது இங்குப் புலப்பட வைக்கப்பட்டதால், அது ஒட்டு என்னும் பிறிது மொழிதல் அணியாகும். 'கண்போல் அவயவங்கள் காணாஅக் கண்ணிலார் கண்பேறே கண் அக் கழல்” (சிபோ வெ 52)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 85)
3.
ஒர் ஆவணத்திலிருந்து முன்னதாக வெட்டி யெடுக்கப் பட்ட தகவலை ஒரு புதிய நிலையில் பொருத்துதல். சில கணினியமை வுகளில் வாசகத்தின் அல்லது வரைகலையின் பரப்புகளை ஒர் ஆவணத் திலிருந்து வெட்டியெடுத்து பாதுகாத்து பின்னர் இன்னொரு ஆவணத்தில் ஒட்டலாம். — paste
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1088)
4.
ஒரு தாவரத்திலிருந்து பிரிக்கப்படும் மொட்டு அல்லது தண்டகம் (தண்டு + இலை). இது அரும்புதல் அல்லது ஒட்டுதல் மூலம் புதிய தாவரமாக வளரவல்லது. எ-டு எலுமிச்சை, மா — scion
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 384)
5.
இது கரை ஒட்டு. இது வரிமுறிவை உண்டாக்குவது — 3) BR
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 212)
6.
இது பத்தி ஒட்டு. ஒரு புதிய பத்தியைக் குறிப்பது — 4) P
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 212)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sszfb4g5/

தமிழ்
“ஒட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sszfb4g5/
APA
Oliyon Research. (2026). ஒட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sszfb4g5/
MLA
"ஒட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sszfb4g5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment