உப்பர்ட்டால்
upparṭṭāl
நகரம் செருமனி நாட்டின் வட இரைன்வெசுட்டு பேலியா மாநிலத்தில் அமைந்துள்ளது.
நகரம் செருமனி நாட்டின் வட இரைன்வெசுட்டு பேலியா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது உப்பர் (Wupper) ஆற்றின் இருமருங்கிலும் உள்ள செங்குத்தான சரிவுகளை ஒட்டினாற் போல் 13 கி.மீ. பரந்துள்ளது. உப்பர்ட்டால் (Wuppertal) ஒரு தொழில்நகரம், பட்டு, மென்பட்டுவகை, செயற்கை நூல்கள், கம்பளங்கள், வீட்டுக்குத் தேவையான தட்டுமுட்டுப் பொருள்கள் போன்ற பொருள்கள் இங்குச் சிறப்பாக உற்பத்தியாகின்றன. இரும்பு, உருக்கு ஆலைகள் பல இங்கு உள்ளன. உணவுப் பொருள்களைப் பதப்படுத்தல், மருந்து வகைகள், சாயப்பொருள், வெடிகுண்டுகள், இசைக்கருவிகள், காகிதம், தோல் போன்றவை உற்பத்தி செய்யப்படுதல் ஆகியவை இங்கு நிகழ்கின்றன.
உப்பர்ட்டால் பகுதியில் கி.பி. 11, 12–ஆம் நூற்றாண்டுகளில் மக்கள் குடியேற்றங்கள் ஏற்பட்டுப் பல்வேறு சமூகங்கள் உருவாயின. பார்மன் (Barmen), எல்பர்பெல்டு (Elberfeld), உரோன்சுடார்பு (Ronsdorf), பியன்பர்கு (Beyenburg), குரோனன்பர்கு (Cronenburg), வோவிங்கல் (Vohwinkel) போன்ற நகராட்சிப் பகுதிகள் 1929–ஆம் ஆண்டில் பார்மன் எல்பர்பெல்டு (Barmen–Elberfeld) என்னும் பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்டன. இது உப்பர்ட்டால் என்னும் பெயராக 1930–இல் மாற்றப்பட்டது.
ஏழைகளுக்கு உதவி செய்யும் எல்பர்பெல்டு முறை, (Elberfeld System) இவ்வூரில் தொடங்கிப் பெரும் புகழ் பெற்றது. பின்னர் இம்முறையை ஏனைய செருமானிய நகரங்களும் ஏற்றுக் கொண்டன. இம்முறை கி.பி. 1853–ஆம் ஆண்டில் இந்நகரில் நிலைநாட்டப்பட்டது. இதன்வழி நலிந்தோர், வறியோர் போன்றவர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமக்களின் பொறுப்பில் விடுத்து, அவர்களின் திறமைகளைப் பயனுள்ள பணிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். தலைசிறந்த தொழில் நகரமாயிருந்த காரணத்தால் இரண்டாம் உலகப்போரின் போது இந்நகரம் கடுங்குண்டு வீச்சுக்காளாயிற்று. போருக்குப் பின்னர் மீண்டும் இந்நகரம் செழித்து வளர்ந்துள்ளது. இப்போது இந்நகரம் மேற்குச் செருமனியில் உள்ளது.
உப்பர்ட்டால் நகரின் மக்கள்தொகை 3,92,000 (1981).
தெலுங்கு, கன்னட மொழியைப் பேசுபவர்கள். கிணறு வெட்டுதல், கால்வாய் வெட்டுதல், வீடு கட்டுதல், கல் அறுத்தல், பிற மண் வேலைகள் முதலானவற்றைத் தொழிலாகக் கொண்ட சாதிக் குழுவினர் என உப்பலியர், உப்பராவினர் பற்றி எச்.ஏ. இசுட்டூவர்ட்டு (H.A. Stuart) குறிப்பிடுவார். தெலுங்கு உப்பராவினர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் அரசர்களின் கோட்டைகளுக்கு மண்சுவர் எழுப்பும் தொழிலை மேற்கொண்டிருந்தனர் எனப் புச்சானன் (Buchanan) குறிப்பிடுகிறார். இவர்கள் உப்புத் தொழில் மட்டுமன்றி வெடிமருந்துக்கு முதன்மையான பொருள்களுள் ஒன்றான வெடியுப்புப் (Saltpetre) பொருளையும் உற்பத்தி செய்தனர். எனினும் இவர்களது மரபுத் தொழில் உப்புத் தொழிலே.
உப்பிலியர், உப்பராவினர், உப்பாராவினர் ஆகிய மூவரும் முன்னாளில் ஓர் இனத்தவரே என்பர் மானிடவியலார். நாளடைவில் இவ்வினத்தவர் பல பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து அந்தந்த வட்டார மொழியை ஏற்றுச் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ முற்பட்டனர். இன்று இவர்கள் ஒரிசா மாநிலக் கஞ்சம் (Ganjam) மாவட்டத்திலிருந்து தமிழ்நாட்டின் தென் பகுதி வரை பரவிக் காணப்படுகின்றனர்.
கடவுள் தமக்கு உப்பு வழங்கும் பொருட்டுப் படைத்துக்கொண்ட உப்பிலியனின் வழிவந்தவர்கள் என உப்பிலியர் தம்மைக் கருதுகின்றனர். உப்பிலியனின் மனைவி கண்ணாடி வளையல்கள் வாங்குவதற்கு உப்பைப் பண்டமாற்றம் செய்ததால் கடவுளின் நம்பிக்கையை இவ்வினத்தவர் இழந்தனர் என்றும், தவறு செய்த உப்பிலியன் மனைவியைக் கொல்ல முயன்றபோது, அவள் பின்பக்கத் துளை வழியே தப்பித்து விட்டாள் என்றும், இதனாலேயே தங்கள் சாதிப் பெண்கள் கண்ணாடி வளையல்களை அணிவதில்லை என்றும், இவர்கள் அடுப்புக் கட்டும் போது ஒரு துளையினை வைத்துக் கட்டுவர் என்றும் குறிப்பிடுவர். இவர்களது மரபினைக் குறிப்பிடும் போது விட்டுணு புராணத்தில் (Vishnu Purana) குறிப்பிடப்பட்டுள்ள சகாரா (Sagara) என்னும் தொன்மயனின் (Mythical Individual) வழிவந்தவர் என்றும் குறிப்பிடுவர். அத்தொன்மயன் வங்கக் கடலைத் தோண்டிய பெருங்கதையையும் குறிப்பிடுவர்.
உப்பங்கழியிலிருந்தும் கடல் நீரிலிருந்தும் பெறப்பட்ட உப்புகளை இலம்பாடிகளும், கொரச்சாவினரும் (Korachas) பெற்று வாணிகம் செய்தனர். அப்போதைய ஆங்கிலேய அரசும் சென்னை உப்பு ஆணையமும் (1876) நிசாம் (Nizam) அரசும் இவர்களின் தொழிலில் பல விதிகளைப் புகுத்தித் தொழில் முறையில் மாறுபாடுகளை ஏற்படுத்தின.
உப்பிலியர், உப்பரா, உப்பாரா ஆகியோர் இணக்கமாகப் பல இடங்களில் காணப்பட்டாலும் இவர்களின் குழுக்களிடையே திருமணம் நடைபெறுவதில்லை. இவர்களிடையே மணப்பெண் பூப்படைந்த பின்னரும் பூப்படைடயா முன்னரும் மணம் கொள்வர். மணமுறை பலபகுதிகளில் பலவாறாக நடைபெறுகிறது. தந்தைவழி அத்தையின் மகளை விரும்பி மணக்கின்றனர். இவர்களின் சமூகச் செயற்பாடுகளையும் சிக்கல்களையும் ‘பட்டக்காரன்’ என்னும் சாதித்தலைவன் கண்காணிக்கிறான். பஞ்சாயத்து அமைப்பு இவர்களிடையே இப்போது நிலவுகிறது. சமூகத்தில் குற்றம் இழைப்பவருக்கு எளிமையானது முதல் கடுமையானது வரை தண்டனை உண்டு. விதவை மணமும் மறுமணமும் இவர்களிடையே உண்டு.
உப்பிலியர்கள் சைவ சமயத்தையும் வைணவ சமயத்தையும் சார்ந்த இரு நிலையினரால் உள்ளனர். கிராமத் தெய்வங்களையே பெரிதும் வழிபடுகின்றனர். சங்கலம்மா (Sunkalamma), திம்மப்பா (Thimmappa), சம்புலம்மா (Jambulamma) போன்ற தெய்வங்கள் குறிப்பிடத்தக்கவை.
உப்பிலியர்கள் சமூக, பொருளாதார அமைப்பில் மாறுதல்களைப் பெற்று வருகின்றனர். இன்று இவர்களும் பலர் தங்களின் மரபுத் தொழிலை விடுத்து அரசுப் பணியிலும் தொழிற் கூடங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
உப்புச் சத்தியாக்கிரகம்
அண்ணல் காந்தியடிகள் இந்தியத் திருநாட்டினை அடிமைப்படுத்திய அந்நிய ஆங்கிலப் பேரரசுக்கெதிராக நடத்திய அறப்போராட்டங்களுள் முக்கியமான ஒன்று உப்புச் சத்தியாக்கிரகம். மக்கள் நாடோறும் பயன்படுத்தும் முக்கிய பண்டமான உப்பின் மீது ஆங்கில அரசு விதித்த வரிப்பளுவினால் இந்திய ஏழை மக்கள் அல்லலுக்குள்ளாயினர். எனவே உப்புச் சட்டத்தை மீறிக் காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்த விழைந்தார். ‘உப்புச் சட்டத்தை மீறுதல்’ என்ற உப்புச் சத்தியாக்கிரகத்தால் காந்தியடிகள் இந்திய மக்களின் உள்ளங்களில் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டது. சாதி, சமய மற்றும் இனவேறுபாடுகளின்றி உப்பு அனைவருக்கும் பொதுவானதால் காந்தியடிகள் அதனையே படைக்கலமாகக் கொண்டு, அன்னை பாரதத்தின் அடிமை விலங்ககற்றி இந்தியத் துணைக் கண்டத்திற்கு விடுதலை வாங்கித்தர முற்பட்டார்.
இந்திய அரசப்பேராளரான இர்வின் பிரபுவினால் ‘தேநீர்க் கிண்ணத்தில் எழுந்த புயல்’ (Storm in a Tea Cup) என்றும், ஆங்கில அதிகாரிகளால் ‘சிறுபிள்ளைத்தனமான கிளர்ச்சி’ (Kindergarten Cries) என்-
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 912)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sqnzddku/
தமிழ்“உப்பர்ட்டால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sqnzddku/APA
Oliyon Research. (2026). உப்பர்ட்டால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sqnzddku/MLA
"உப்பர்ட்டால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sqnzddku/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment