அகாலவருச சுபதுங்கர்
akālavaruca cupatuṅkar
இராட்டிரகூட அரசர் கிருட்டிணராசருக்கு, சுபதுங்கர், அகாலவருசர் என்னும் பெயர்கள் உண்டு.
இராட்டிரகூட அரசர் கிருட்டிணராசருக்கு, சுபதுங்கர், அகாலவருசர் என்னும் பெயர்கள் உண்டு. தந்திதுருகர் என்னும் அரசர் குழந்தையின்றி இறந்தார் என்பதனைக் கர்தா (Karda) என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று குறிப்பிட்டுள்ளது. அவருக்குப் பின்னர்ப் பட்டத்திற்கு வந்தவர்தான் கிருட்டிணராசர்; அவர் தந்திதுருகரின் தந்தைவழிச் சிற்றப்பனாவர். தந்திதுருகர் விட்டுச் சென்ற பணியை அகாலவருசர் நிறைவேற்றினார். அவர் சாளுக்கியர்களை வெற்றி கண்டார். அவரைப் பற்றிக் கூறும் இரு கல்வெட்டுகள், அவர் “சாளுக்கிய இனம் என்னும் கடலைக் கடைந்து இலக்குமி என்னும் முதன்மையான பேராட்சியை நிலைநாட்டினார்” என்று உருவகப்படுத்திக் கூறுகின்றன. இராகப்பா என்பவரைத் தோற்கடித்து முதன்மையான பேராட்சியை நிலைநாட்டினர் என்று அகாலவருச சுபதுங்க கிருட்டிணராசரைப் பற்றிக் கூறுவர். வார்தாச் செப்பேடுகள் இவ்வரசர் சிவனுக்குப் பல கோயில்களைக் கட்டினார் என்றும் அவை கயிலை மலையை ஒத்திருந்தன என்றும் கூறுகின்றன. கிருட்டிணராசர், எலபுரா மலையில் அழகான கோயிலைக் கட்டுவித்தார் என்று பரோடா கல்வெட்டுச் சாசனம் குறிப்பிடுகிறது. அவரால் கட்டப்பட்ட சிவன்கோயில் இன்றும் நிலைத்துள்ளது. கிருட்டிணராச அகாலவருச சுபதுங்கர் கி.பி. 753-775 வரை ஆண்டிருக்க வேண்டும் என்பது இராதாகிருட்டிண கோபால் பண்டார்க்கரின் கருத்தாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 136)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sqckxbg4/
தமிழ்“அகாலவருச சுபதுங்கர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sqckxbg4/APA
Oliyon Research. (2026). அகாலவருச சுபதுங்கர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sqckxbg4/MLA
"அகாலவருச சுபதுங்கர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sqckxbg4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment