குறிப்பிட்ட வினைக்குத் தொடர்பற்ற ஏதோவொரு பொருளுடன் வினையுறுவதால், நொதியின் வினை வேகம் தணிக்கப் படுகிறது.நொதியின் வினையைத் தடுக்கும் வேதிப் பொருள்கள் பல வகையானவை. பொதுவாக, இவை நொதி மூலக் கூறின் கிளைச் சங்கிலிகளுடனோ, தொகுதிகளுடனோ இடையீடுறுபவை. Ag*,Cd2+, Hg2+ N- எத்தில் மலியிமைடு ஆகியன வலிவு மிக்க நொதித் தடுப்பான்களாகும். முதற்படியாக, இவை யாவும் சிஸ்டீன் எனும் புரதப் பொருளின் (அமினோ அமிலம்) SH தொகுதியைப் பாதிக்க வல்லன. நரம்பு முடக்கு வளிமங்களான ஈரைசோ–புரோப்பைல் ஃப்ளூரோ பாஸ்பேட் மற்றும் டெட்ராஎத்தில் பைரோ பாஸ்ஃபேட் ஆகியன செரைன்,திரியோனைன், ஹிஸ்டிடீன் ஆகியவற்றின் தொகுதியுடன் இணைவதன் மூலம், நொதியின் வினைத் திறனைக் குறைக்கின்றன. இரும்பு பாஸ்பைரீன்களைச் சயனைடு அயனியும், இணைப்புப் புரதங்களின் கூட்டுறுப்புப் பகுதிகளைத் தாமிர அயனியும், அண்டை SH தொகுதிகளைக் கொண்ட டை தயால்களைக் கரிம ஆர்செனிக் சேர்மங்களும் பெரிதும் பாதிக்கின்றன. நொதித் தடுப்பு என்பது போட்டியிட்டுத் தடுத்தல் (competitive inhibition), மீளாத் தடுப்பு (irreversible or non-competitive)cror இரு வகைப் படும். போட்டியிட்டுத் தடுத்தலில், தடுப்பான் மூலக் கூறின் வடிவம், நொதியின் வடிவத்திற்கு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும். பற்றுப் பொருளிலுள்ள (substrate) கிளர்வு கொள் மையத்துடன் இணைவதற்கு, நொதியுடன் இப்பொருள்கள் தடுப்புச் செயல் முறையைத் திருப்பி ஒடுக்கலாம். மீளாத் தடுப்பில், நொதியும், தடுப்பானும் சக பிணைப்பு மூலம் ஒரு நிலையான அணைவுச் சேர்மத்தை உருவாக்குகின்றன. போதுமான அளவு தடுப்பான் இடம் பெறுமாயின், சாதாரண பற்றுப் பொருளின் மீதான நொதியின் வினை வேக மாற்றத் திறன் முழுமையாக அழிக்கப் பட்டு விடும். மேற்கூறிய தடுப்பான்௧கள் நொதியின் வினைத் திறன் மிக்க பகுதியுடன் இணைவதால், செயல் நீக்கம் புரிகின்றன. மாறாக, வேறு சில பொருள்கள், நொதியின் வினையுறு மையத்தின் வச அமைப்பை (confirmation) மாற்றுவதன் மூலம் பணி புரிகின்றன. அயலினத் தடுப்பான்கள் (allosteric effectors) எனப் படும் இப்பொருள்களின் அமைப்பு, நொதி மூலக் கூறின் அமைப்புடன் எவ்வகைத் தொடர்புமற்றது. —மே.ரா. பாலசுப்ரமணியன் துணை நூல். I.L.Finar, Organic Chemistry, Vol–II, Fifth Edition, ELBS, London, 1975; B.L.Gslery (Ed.), Hawk's physiological chemistry, 14th Edition, Tata-McGraw-Hill Publishing company Ltd., 1971.