அட்ட கிராமம்
aṭṭa kirāmam
எட்டுக் கிராமங்களைக் கொண்ட ஊர் அட்ட கிராமம் எனப்படும்.
எட்டுக் கிராமங்களைக் கொண்ட ஊர் அட்ட கிராமம் எனப்படும். இராமானுசர் மைசூரை யாண்டுவந்த சமண சமயத்தைச் சார்ந்த பிச்சாளன் என்னும் ஒய்சாள அரசனை வைணவ சமயத்திற்கு மாற்றினார். இதனால் தனது பெயரை அவன் விட்டுணு வர்த்தனன் என மாற்றிக் கொண்டான். இவ்வரசன், சீரங்கப்பட்டணத்திற்கருகில் காவிரியின் இருகரையிலும் உள்ள எட்டுக் கிராமங்களை இராமானுசருக்குப்பரிசாக அளித்தான். இதனால் இக்கிராமத்திற்கு “அட்ட கிராமம்” எனப் பெயர் வந்தது. இவை கி.பி. 1863–ஆம் ஆண்டு மைசூர், ஆசன் மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டன. இங்குச் சர்க்கரை உற்பத்தித் தொழில் சிறப்பானது, இங்கு உற்பத்தி செய்யப்படும் சர்க்கரைக்கு “அட்ட கிராமம்” என்று பெயர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 206)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sgr24buv/
தமிழ்“அட்ட கிராமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sgr24buv/APA
Oliyon Research. (2026). அட்ட கிராமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sgr24buv/MLA
"அட்ட கிராமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sgr24buv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment