சிற்றிலை நோய்
ciṟṟilai nōy
இந்நோய் கத்தரியில் தோன்றுகிறது.
இந்நோய் கத்தரியில் தோன்றுகிறது. சிற்றிலை நோய் (little leaf disease) மைகோபிளாஸ்மா போன்ற உயிரியினால் ஏற்படுகிறது.
அறிகுறிகள். இந்நோய் செடியின் அனைத்துப் பருவத்திலும் தோன்றலாம். இந்நோயின் முக்கிய அறிகுறி இலை சிறுத்தலாகும். புதிதாகத் தோன்றும் இலைகள் மேன் மேலும் சிறுத்து, மிகச் சிறிய வடிவத்தை அடைகின்றன. அத்துடன், அவை மெல்லியவாகவும், பசுமை நிறம் குன்றி, வெளுத்தும் காணப்படும். முள் உள்ள கத்தரி வகைச் செடிகளாயின், அவற்றின் முட்கள் மறைந்து விடுகின்றன. நோய் தாக்கிய செடி குட்டையாகவும், சிறுத்த இலைகளை- யுடைய பக்கக் கிளைகளை அடர்த்தியாகக் கொண்டதாகவும் தோன்றும், கத்தரிச் செடியின் இயற்கைத் தோற்றமே மாறி விடுகிறது. இத்தகைய செடிகளில் பூக்கள் உண்டாவதில்லை. பூக்கள் தோன்றினாலும், இலை போலப் பசுமை நிறம் பெற்றுக் காணப்படும். நோய் தாக்கப்பட்ட செடியிலிருந்து எப்பயனும் கிடைக்காது.
பரவுதல். இந்நோய் அம்ராஸ்கா டெவாஸ்டன்ஸ் (Amrasca devastans), ஹிஷிமோனஸ் ஃபைசிடிஸ் (Hishimonus phycitis) போன்ற தத்துப் பூச்சிகளால் பரவுகிறது. கண்டங்கத்தரி, உருளைக் கிழங்கு, தக்காளி, புகையிலை, ஊமத்தை போன்றவற்றிலும் இந்நோய் தோன்றும்.
தடுப்புமுறை. நோயின் அறிகுறி தோன்றியவுடன், செடிகளைப் பறித்து அழித்து விடல் நோய் பரவுதலைக் குறைக்கும். இந்நோயால் பாதிக்கப்படும் மாற்றுப் பயிர்களைக் கத்தரி பயிரிடும் நிலத்திற்கருகில் பயிரிடாமல் இருத்தல் சிறந்தது.
தத்துப்பூச்சிகளை 0.05% மோனோகுரோட்டோஃபாஸ் அல்லது 0.03% டைமீதோயேட் போன்ற பூச்சி கொல்லிகளைத் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும். கத்தரிச் செடியில் டெட்ராசைக்ளின் என்ற நுண்ணுயிர் எதிர்ப் பொருளைத் தெளிப்பதால், இந்நோய் பரவுவது கட்டுப்படுத்தப்படும். —கா.சிவப்பிரகாசம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 312)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/se8vhuss/
தமிழ்“சிற்றிலை நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/se8vhuss/APA
Oliyon Research. (2026). சிற்றிலை நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/se8vhuss/MLA
"சிற்றிலை நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/se8vhuss/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment