ஆசிரியப்பா
āciriyappā
ஆசிரியப்பா தமிழிலுள்ள நால்வகைப் பாக்களில் ஒன்று.
ஆசிரியப்பா தமிழிலுள்ள நால்வகைப் பாக்களில் ஒன்று. இதற்கு அகவற்பா எனவும் பெயருண்டு. இது ஈரசைச் சீராகிய இயற்சீர் நான்கு கொண்ட அளவடிகளால் ஆசிரியத்தளையால் வரும். குறைந்த எல்லை மூன்றடி ; பேரெல்லைக்கு அளவில்லை. ஈரசைச் சீர்களேயன்றி,விளங்கனிச்சீர்கள் இரண்டு மொழிந்தபிற சீர்கள் வரவும் பெறும்; பிற தளைகளும் வரும். இது நான்கு வகைப்படும் : 1. ஈற்றயலடி முச்சீரடியால் வருவது நேரிசை ஆசிரியப்பா. 2. எல்லா அடிகளும் நாற்சீரடிகளாக வருவது நிலைமண்டில ஆசிரியப்பா. 3. முதலடியும் இறுதியடியும் நாற்சீரடியாய், இடையிலுள்ள அடிகள் இரண்டும் பலவும் இருசீரடியும் முச்சீரடியுமாக வருவது இணைக்குறளாசிரியப்பா. 4. எந்த அடியை முதல் நடு இறுதியாக அமைத்தாலும் பொருள் மாறாமல் இருப்பது அடிமறிமண்டில ஆசிரியப்பா.
ஆசிரியப்பாவின் இனம்: ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம் (த.க).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 386)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sc8r8aka/
தமிழ்“ஆசிரியப்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sc8r8aka/APA
Oliyon Research. (2026). ஆசிரியப்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sc8r8aka/MLA
"ஆசிரியப்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sc8r8aka/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment