இலாடத்தில் நிகழும் அவத்தை

ilāṭattil nikaḻum avattai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஐந்து அவத்தை இலாடம் சாக்கிரத்தானம். ஆகவே, இதில் நிகழும் ஐந்து அவத்தைகளாவன. 1. சாக்கிரம் சாக்கிரம் 2 சாக்கிர சொப்பனம் 3. சாக்கிர கழுத்தி 4. சாக்கிரதுரியம் 5. சாக்கிர துரியாதீதம். இவை முறையே அவ்வத் தத்துவங்கள் ஐந்து நான்கு மூன்று.இரண்டு.ஒன்று என்னும் எண்ணிக்கையில் நின்று தொழிற்படுவதால் உண்டாகுபவை. வேறுபெயர் சகலசாக்கிரம், சகல சொப்பனம், சகல சுழுத்தி, சகல துரியம், சகல துரியாதீதம். சகல சாக்கிரத்தில் யாதொரு கருவியும் குறையாது எல்லாக் கருவிகளும் நன்கு செயற்படும். அதனால் ஆன்மா இந்நிலை யில் உலகத்தை நன்றாக அறிந்து நுகரும். பிரேரகக் (செலுத்தும்) கருவிகள் என்று குறிப்பிடப்பட்ட சிவதத்துவம் ஐந்தும் குறைவின்றியே நிற்கும். கேவல சாக்கிரத்தில் தத்துவ தாத்துவிகங்களுள் 50 கருவிகள். செயற்படா. ஆகவே, ஆன்மா விழிப்புற்றுக் கண்டும் காணாததுமாக இருக்கும். பிற கருவிகளும் இவ்வாறே இருக்கும். சகல சொப்பனம், சகல சுழத்தி முதலியவையும் புருவ நடுவில் (இலாடத்தில்) நிகழும். இருப்பினும் இடையிடையே சிவ தத்துவம் ஐந்திலிருந்து நான்கு மூன்று, இரண்டு, ஒன்று என ஏற்ற பெற்றியால் குறைந்து போவதால், உலக அறிவு இடையறவின்றி நிகழாது. கேவல அவத்தைகளிலும் ஆன்மா புற உலகத்தை அறியா தொழியினும், அந்நிலைகளில் ஆணவ இருள் மேலிட, அறியாமையில் அழுந்துவதாகும். சகல அவத்தைகளில் உலகத்தை அறியாவிட்டாலும், ஆணவம் மேலிடாமையால், குறிப்பிட்ட ஒரு பொருளிலே அழுந்தி இருக்கும். சுத்த சாக்கிரம் முதலியவை தத்துவ தாத்துவிகங்களாகிய மாயா கருவிகளால் நிகழாது. இறைவன் திருவருளாலேயே நிகழும். ஆகையால், அந்நிலையிலும் கருவிகள் இல்லாது ஒழியினும், ஆன்மா ஆணவ இருளிலோ உலகப் பொருளிலோ அழுந்தாது, இறைவன் திருவருளில் பதிந்து நிற்கும். (சிவஞானபோதம் பா29).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 62)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/saejehz2/

தமிழ்
“இலாடத்தில் நிகழும் அவத்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/saejehz2/
APA
Oliyon Research. (2026). இலாடத்தில் நிகழும் அவத்தை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/saejehz2/
MLA
"இலாடத்தில் நிகழும் அவத்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/saejehz2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment