சுளுக்கு
cuḷukku
சுளுக்கு ( கால்நடை)
சுளுக்கு ( கால்நடை)
தசை நாண்கள் அளவுக்கு மீறி இழுபடுவதாலும், கிழிபட்டு அல்லது அடிபட்டுச் சேதமடைவதாலும், மூட்டுகளின் திறன் தாக்கமுற்றுச் சுளுக்கு ஏற்படுகிறது. பொதுவாக வேலை செய்யும் எருது, குதிரைகளின் முன் கால்களே மிகுதியாகத் தாக்கமுறக் கூடும்.
பிறவியிலேயே குறைபாடான அமைப்பு (poor confirmation), வெட்டப்படாமல் நீளமாக வளர்ந்த குளம்புகள், இளம் விலங்குகளைத் துன்புறுத்திப் பயிற்சி கொடுத்தல் முதலியவை சுளுக்குத் தோன்றுவதற்குக் காரணமாகலாம். கடுமையான சுளுக்குக்கு மிகுந்த சுமை வைத்தல், நீண்ட நேரம் வேகமாக ஓட்டுதல், வழுக்கி விழுதல், தடுக்கி விழுதல் போன்றவையும் காரணமாகலாம். இவற்றால், சோர்ந்து போன தசை (muscle fatigue), தசை நாண்களின் பக்கமாகச் சுமையைச் சேர்ப்பதால் தாக்கம் ஏற்படுகிறது.
சுளுக்கு ஏற்பட்டால் தசை நாண்கள் அழற்சி (inflammation) காரணமாக, அப்பகுதியில் வெப்பம் ஏற்படும். நொண்டுதல் பாதிப்பின் அளவைப் பொறுத்து வேறுபடும். கடுமையான வலி இருந்தால், காலை முன்னால் நீட்டியும், சிறிது வளைத்தும் வைத்துக் கொள்ளும். தசை நாண்களின் சவ்வு (sheath) பருத்து, அதனுள் உள்ள நீரும் (synovial fluid) மிகுதியாகும்.
தாக்கமுற்ற பகுதிகளின் அளவைப் பொறுத்தே, நோய் குணமாகக் கூடிய வாய்ப்பைக் கணித்துக் கூற இயலும். மருத்துவ முறையில் ஓய்வளித்தல் இன்றியமையாதது. ஓய்வும், நொண்டுதலும் முழுமையாகக் குறையும் வரை தேவைப்படும். அழற்சியைக் குறைக்க, முதலிரு நாளுக்குப் பற்றுப் போட வேண்டும். சேதமடைந்த தசை நாண்களைச் சேர்த்து வைக்கும் வகையில், பஞ்சு வைத்துக் கட்டுப் போட வேண்டும். ஒற்றடம் கொடுத்தால் வலி குறையும், —வி. ராமசாமி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 583)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s9prx76x/
தமிழ்“சுளுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/s9prx76x/APA
Oliyon Research. (2026). சுளுக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s9prx76x/MLA
"சுளுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/s9prx76x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment