செயற்கைப் பல்
ceyaṟkaip pal
இயற்கையாகவோ, விபத்தாலோ விழுந்து விட்ட பற்களுக்குப் பதில், செயற்கையாகச் செய்யப்பட்ட பற்கள் அடங்கிய தொகுப்பைப் பொருத்தலாம்.
இயற்கையாகவோ, விபத்தாலோ விழுந்து விட்ட பற்களுக்குப் பதில், செயற்கையாகச் செய்யப்பட்ட பற்கள் அடங்கிய தொகுப்பைப் பொருத்தலாம். இது செயற்கைப் பல் தொகுப்பு (denture ) எனப் படுகிறது. செயற்கைப் பல் தொகுப்பை அணிந்து கொள்வதன் மூலம், ஒழுங்கான உச்சரிப்பு, உணவை அரைத்து உண்ணும் திறன், அழகு ஆகியவற்றை மீண்டும் பெறலாம்.
செயற்கைப் பல் தொகுப்பில் அனைத்துப் பல் தொகுப்பு, பகுதிப் பல் தொகுப்பு என இரு வகை உண்டு. முழுதுமாகப் பல் இழந்தவர்களுக்கும், வளர்ச்சிக் குறைபாட்டால் பல் உருவாகாத் தன்மை கொண்டவர்க்கும் தயாரிக்கப்படும் பல் தொகுப்புக்கு அனைத்துச் செயற்கைப் பல் தொகுப்பு என்று பெயர். ஓரிரு பற்கள் அல்லது சில பற்கள் இழந்தவர்க்கும், வளர்ச்சிக் குறைபாட்டால் ஓரிரு பற்கள் உருவாகாத் தன்மை கொண்டவர்க்கும் தயாரிக்கப்படும் பல் தொகுப்பு, பகுதிச் செயற்கைப் பல் தொகுப்பு எனப் படும். செயற்கைப் பல் தொகுப்புப் பொருத்தியவருக்குத் தொடக்கத்தில் பேசவும், உண்ணவும் கடினமாக இருக்கும். ஆனால், நாளடைவில் இது மறைந்து விடும். காலையில், செயற்கைப் பல் தொகுப்பைச் சோப்பு நீரில் தூய்மை செய்ய வேண்டும். —ஜே.ஜி. கண்ணப்பன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 822)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s6e8pkbn/
தமிழ்“செயற்கைப் பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/s6e8pkbn/APA
Oliyon Research. (2026). செயற்கைப் பல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s6e8pkbn/MLA
"செயற்கைப் பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/s6e8pkbn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment