சிம்மம் (அரிமா) <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> பன்னிரண்டு இராசிகளில் ஐந்தாம் இராசியான சிம்மம் (leo)வான நடுவரைக்கு (celestial equator) வடக்கேயுள்ள ஆறு ராசிகளில் ஒன்றாகும். இந்த ராசியில் மகம், பூரம், உத்தரம் ஆகிய விண்மீன்கள் உள்ளன. இவற்றை இணைத்தால், சிம்மம் போன்ற உருவம் தெரிவதால், இந்த ராசிக்குச் சிம்மராசி எனப் பெயரிடப்பட்டது. சிம்மத்தின் இதயப் பகுதியில் காணப்படும் விண்மீன் மகம் (regulus) எனப்படும். சூரியனுக்கும், இதற்குமுள்ள தொலைவு 50 ஒளி ஆண்டுகளாகும். ஆவணி மாதத்தில், சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும். —பங்கஜம் கணேசன்