அக்கிரியாவாதம்
akkiriyāvātam
சமணத்தையும் பௌத்தத்தையும் தோற்றுவித்த மகாவீரரும் (கி.மு.
சமணத்தையும் பௌத்தத்தையும் தோற்றுவித்த மகாவீரரும் (கி.மு. 559–527) புத்தரும் (கி.மு. 570–490) வாழ்ந்த காலத்தில் 363 வகையான தத்துவக் கருத்துகள் பல்வேறு கூட்டத்தாரிடையே நிலவி வந்தன எனப் பிற்காலச் சமண பௌத்த சமய–தத்துவ இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த 363 வகையான தத்துவக் கருத்துகளை அக்காலத்திய சிந்தனையாளர், கிரியாவாதம், அக்கிரியாவாதம், அஞ்ஞானவாதம், விநயவாதம் என்ற நான்கு பெரும் பிரிவுகளில் அடக்கினர். அக்கிரியாவாதத்தில் 84 வகைகள் இருந்தன. ஆன்மா உண்டு; அது செயல்களில் ஈடுபடுகிறது; செயல்களின் விளைவுகளை அது நுகர்கிறது என்ற கொள்கையைக் கொண்டதே கிரியாவாதம். அதற்கு எதிரான கொள்கையைக் கொண்டதே அக்கிரியாவாதம். அது வினையின் தேவையையோ அதன் பயனையோ ஏற்றுக் கொள்ளவில்லை. நடப்பது நடந்தே தீரும் என்றும் மனித முயற்சிகளும் செயல்களும் பயனற்றவை என்றும் அது எடுத்துரைத்தது.
அக்கிரியாவாதிகளுள் எக்கவாதிகள், அநிக்கவாதிகள், மிதவாதிகள், நிமித்தவாதிகள், சாயவாதிகள், சமுச்சேதவாதிகள், நியதிவாதிகள், நசாந்திவாதிகள் என்று சொல்லப்பட்ட எட்டுப் பிரிவினர் தம் காலத்தில் வாழ்ந்ததை மகாவீரர் குறிப்பிட்டுள்ளதாகத் தாணாங்க சூத்திரம் என்னும் சமய நூல் அறிவிக்கிறது. அவர்களுள் பலர், காலம், ஈசுவரன், ஆன்மா, நியதி, சுபாவம், யதிருச்சா (ஊழ்) எனப்படும் ஆறும் உலகப் படைப்பிற்கு மூலகாரணங்கள் எனக் கூறினர்.
சமணரும் பௌத்தரும் அக்கிரியாவாதத்தை வன்மையாகக் கண்டித்த போதிலும், அதன் கொள்கைகளில் சிலவற்றை ஏற்கத் தயங்கவில்லை எனத் தெரிகிறது. கூ.ரா.ந.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 45)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rv4gzt8m/
தமிழ்“அக்கிரியாவாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rv4gzt8m/APA
Oliyon Research. (2026). அக்கிரியாவாதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rv4gzt8m/MLA
"அக்கிரியாவாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rv4gzt8m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment