செயல் முறைப் பொறியியல்
ceyal muṟaip poṟiyiyal
அனைத்துச் செயல்களின் வரிசையை அறுதியிடவும் சிறப்புக் கருவிகளான கல்வி, நிலைப்படுத்தி போன்றவற்றையும், அவற்றின் செயல் முறைகளையும் தேர்ந்தெடுப்பதற்கும், இப்பிரிவு இன்றியமையாதது.
அனைத்துச் செயல்களின் வரிசையை அறுதியிடவும் சிறப்புக் கருவிகளான கல்வி, நிலைப்படுத்தி போன்றவற்றையும், அவற்றின் செயல் முறைகளையும் தேர்ந்தெடுப்பதற்கும், இப்பிரிவு இன்றியமையாதது. செயல் முறை வல்லுநர், பொறியியல் வரைவியலுக்கு (engineering drawing) தக்கவாறு மூலப் பொருள்களை மாற்றங்களுக்குட்படுத்தித் தேவையான உருவ மாற்றம் செய்வதற்கு உதவும் அனைத்துச் செயல் முறைகளையும் கவனித்துச் செயல்படுவர். இவ்வாறாக, தன்னிடம் உள்ள செயல் முறைகளை மட்டுமல்லாது, வெளி இடங்களில் கிடைக்கும் முறைகளையும் பயன்படுத்திக் கொள்வர்.
பொதுவாக, கிடைக்கும் அனைத்து முறைகளிலும், சிறந்ததைத் தேர்வு செய்து, அதைப் பயன்படுத்துதல் முறையானதாகும். செயல் முறை வடிவமைப்பில், கீழ்க் காணும் வடிவமைப்புத் தேவைகளை கவனித்தல் வேண்டும். அவை மூலப் பொருள்களின் வகை, பயன் படுத்த வேண்டிய கருவி, தேவையான மூலப் பொருள்களின் அளவு, கருவிகளைக் குறிப்பிட உதவும் புவியியல் தன்மைகள், கருவிகளின் மேற்பரப்புத் தன்மை, தயாரான பகுதிகளின் எண்ணிக்கை, செயல் முறைகளின் பொருளாதாரம் ஆகியன. மேற்கூறிய விவரங்கள், துணைச் செயல் முறைகளுக்குப் பொருந்துவனவே.
செயல் முறைத் தேர்வு. அடிப்படைச் செயல் முறைகளிலிருந்தும், துணைச் செயல் முறைகளிலிருந்தும் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்க, சில வழிகாட்டி முறைகள் வல்லுநருக்குத் தீர்வை அறுதியிட உதவும், சில கூறுகளையும் தெரிவிக்கிறது. தேர்வுத் தாள் என்பது பல்வேறு நிறுவனங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்டது. இதில், ஒரே பொருளுக்கு அனைத்து நிறுவனங்களின் தயாரிப்பு மற்றும் இதர விவரங்களும் விளக்கமாகக் கொடுக்கப் பட்டிருக்கும்.
துணைச் செயல்முறைகளின் வரிசைப்பாடு. செயல் முறை வல்லுநர், இயலக் கூடிய செயல் முறைகளின் தன்மைகளை ஆய்ந்து, வடிவியல் மற்றும் அளவுக் கட்டுப்பாடு கொண்ட செயல் முறைகளை வகைப் படுத்துகின்றனர். இவ்வாறான வரிசைப்பாட்டில், அடிப்படைச் செயல் முறைகளில், முதலிலேயே கவனிக்கப்பட்டு,இறுதியில் சரி பார்க்கும் செயல் முறையை விளைப் பொருள்களைக் கட்டுகளாக்கும் முன் கவனிக்கப்பட்டு, இவ்வாறு அனைத்துச் செயல் முறைகளும் அவற்றின் தன்மைகளுக்கேற்ப வகைப்படுத்தப் படுகின்றன. எடுத்துக் காட்டாக, துளை கடைதல் (reaming) செய்வதற்கு முன்பே, ஒரு துளை இட்டிருத்தல் இன்றியமையாததாகிறது. உட்புறச் செயல் முறைகளின் இறுதித் தன்மை, வெளிப்புற இறுதித் தன்மைகளை விட மிகவும் முன்னதாகவே செய்யப்பட வேண்டும்.
துணைக் கருவிகளின் விவரங்கள். குறிப்பிட்ட தயாரிப்புச் செயல் முறைகளில் பயன்படுத்தக் கூடிய அனைத்து வகைத் துணைக் கருவிகளையும் செயல் முறை வல்லுநர் முடிவு செய்து செயல்படுத்த வேண்டும். சிறப்புக் கருவிகளான கவ்வி (jig), நிலைப்படுத்தி (fixtures), அச்சு (die), இதர கருவிகள் ஆகியன வேலை செய்யப்படும் பொருளைப் படிப்பதற்கும், உளியைச் செலுத்தவும், விளைவுகளை அளக்கவும் பயன்படுகின்றன. செயல் முறைகளின் போது, எந்த இடத்தில் சிறப்புக் கருவிகளைப் பயன் படுத்த வேண்டும் போன்ற விவரங்களையும், வல்லுநர் முடிவு செய்ய வேண்டும். செயல் முறைகளின் போது, துல்லியமான பிடிப்பும், செயற்பாடும் கொண்டுள்ளனவா என அடிக்கடி சரி பார்க்க வேண்டும். —வி. சண்முகசுந்தரம் நூலோதி. Harold A. Rothbart, Mechanical Design and Systems Handbook, McGraw-Hill Book Company, London, 1964.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 785)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rtzc5j6y/
தமிழ்“செயல் முறைப் பொறியியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rtzc5j6y/APA
Oliyon Research. (2026). செயல் முறைப் பொறியியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rtzc5j6y/MLA
"செயல் முறைப் பொறியியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rtzc5j6y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment