பக்கவாதம்
pakkavātam
இந்நோய் நிலையில், ஒரு பக்கக் கையும், காலும் செயலற்று விடுகின்றன.ஹெமி (hemi) என்றால், ஒரு பக்கம் (அரைப் பகுதி) என்றும், (plegia)என்றால், செயலிழப்பு என்றும் பொருள்.
இந்நோய் நிலையில், ஒரு பக்கக் கையும், காலும் செயலற்று விடுகின்றன.ஹெமி (hemi) என்றால், ஒரு பக்கம் (அரைப் பகுதி) என்றும், (plegia)என்றால், செயலிழப்பு என்றும் பொருள். இதையே பக்கவாதம் (hemi plegia) என்பர். சில போது, முகத்தின் ஒரு பாதியும் செயலற்று விடுகிறது. பொதுவாக, இத்தகைய செயலிழப்பு பெருமூளை தண்டு வடப் பாதையில் ஏற்படும் நைவுகளால் உண்டாகிறது.
நைவு ஏற்பட்டுள்ள இடத்தை, நோயின் அறிகுறிகள் கொண்டு உறுதி செய்யலாம். பெருமூளைப் புறணி மற்றும் பெருமூளையின் வெள்ளைப் பகுதி, உட்புறப் பொதியம் ஆகியவற்றில் நைவு ஏற்படலாம். எதிர்ப் பக்கத்தில் கை, கால், முகம் செயலிழக்கிறது அல்லது வலிமையிழக்கிறது (hemiparesis). இத்துடன் வலிப்பு, பேச்சின்மை, உணர்ச்சி மரத்துப் போதல், பார்வைத் தளத்தில் கோளாறு ஏற்பட்டால், பெருமூளைப் புறணி அல்லது புறணி அடி பாதிக்கப் பட்டிருக்ககலாம்.
பெருமூளைத் தண்டு வடமும், மூளைத் தண்டும் பாதிக்கப் பட்டால், மேற்கூறிய எதிர்ப் பக்க பக்கவாதத்துடன், அதே பக்கத்தில் கண் இயக்க நரம்பு பாதிக்கப் பட்டு (3ஆம் கபால நரம்பு) கண் தசைகள் செயலிழக்கின்றன. இதுவே வெபர் நோயியம் (Weber's syndrome)எனப் படுகிறது. சில போது, நோய் நைவு கீழ் மட்டத்தில் இருக்கும் போது, ஆறு அல்லது ஏழாம் கபால நரம்பு ஒரு பக்கத்தில் பாதிக்கப் பட்டு, எதிர்ப் பக்கத்தில் பக்கவாதம் உண்டாகிறது. இதை மில்லர்டு–கூப்ளர் நோயியம் என்பர்.
அரிதாகத் தண்டு வடக் கழுத்துப் பகுதியின் வெளிப் புறம் பாதிக்கப் பட்டால், அதே பக்கத்தில் பக்கவாதம் உண்டாகிறது. இங்கு, இரண்டு கைகளும், இரண்டு கால்களும் செயலிழக்கலாம், (quadriplegia) இந்நிலையில், செயலிழந்த பக்கத் தசைகள் சூம்பி விடும்.
பெருமூளைப் புறணி, மூளைத் தண்டு ஆகியவற்றின் குருதி நாள அடைப்பு, காயம், மூளைக் கட்டி, மூளையில் சீழ்க் கட்டி, மூளை அழற்சி, மூளை உறை அழற்சி, காச நோய், மேக நோய் போன்றவை பக்கவாத நோய்க்குக் காரணங்களாகின்றன. —மு.ப. கிருஷ்ணன் துணை நூல். A. Broad, Neurological Anatomy in relation to clinical Medicine, Oxford University Press, Newyork, 1969.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 367)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rtdxkype/
தமிழ்“பக்கவாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rtdxkype/APA
Oliyon Research. (2026). பக்கவாதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rtdxkype/MLA
"பக்கவாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rtdxkype/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment