ஈழவர்
īḻavar
சோழர் கால கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் குறிக்கப்படும் மக்கள்.
சோழர் கால கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் குறிக்கப்படும் மக்கள். இவர்களுடைய தொழில் பனை, தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவதாகும். சோழர் காலத்தில் இவர்கள் இழிகுலத்தவர்களாகக் கருதப்பட்டனர். இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் ஈழவர்கள் பழையனூர் தேவதானத்தில் தென்னை, பனை மரங்களில் ஏறிகள் இறக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தனர் என்னும் செய்தி இடம் பெற்றுள்ளது. பொதுவாகச் சோழர்காலத்தில் இவர்கள் தேவதானம், பிரமதேயம் போன்ற பகுதிகளில் கள் இறக்குவதற்குத் தடை செய்யப்பட்டிருந்தனர். இன்றும் கேரளாவில் தென்னை, பனை மரங்களில் ஏறிக் கள் இறக்குவோர் ஈழவர் என்னும் குலத்தைச் சார்ந்தவரே.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 696)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rt98scwb/
தமிழ்“ஈழவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rt98scwb/APA
Oliyon Research. (2026). ஈழவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rt98scwb/MLA
"ஈழவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rt98scwb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment