இரோசிமா
irōcimā
இரோசிமா என்பது சப்பான் நாட்டிலுள்ள ஒரு நகரம்.
இரோசிமா என்பது சப்பான் நாட்டிலுள்ள ஒரு நகரம். இரண்டாம் உலகப் போரின்போது 1945-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 6–ஆம் நாள் நேச நாடுகளைச் சார்ந்த அமெரிக்கா இந்நகரத்தின் மீது உலகிலேயே முதன்முதலாக அணுக்குண்டை வீசியது. இரோசிமா (Hiroshima) இந்தப் பெயர் கொண்ட மாநிலத்தின் தலைநகர். இது சப்பானின் தென்மேற்கிலுள்ள ஆன்சு (Honshu) தீவிலுள்ளது. இரோசிமா விரிகுடாவில் அமைந்துள்ள இந்நகரம் வாணிகச் சிறப்புப் பெற்றது. ஆடைகள், தோப்பி (Sake), கப்பல் கட்ட உதவும் துணைப் பொருள்கள், பேருந்துகள், இயந்திரங்கள், தட்டுமுட்டுப் பொருள்கள், தளவாடங்கள், தகர அடைப்புகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் போன்ற பொருள்களின் தொழிற்சாலை மையமாக இந்நகர் விளங்குகிறது. வேளாண்மைப் பொருள்கள், கடலில் கிடைக்கும் பொருள்கள் போன்றவற்றின் சந்தையாகவும் இரோசிமா விளங்குகிறது. இந்நகரம் ஏறத்தாழ கி.பி. 1594–ஆம் ஆண்டில் ஓட்டா (Ota) ஆற்றுக் கழிமுகத்தில் அமைக்கப்பெற்ற கோட்டை நகரமாய் அமைக்கப்பட்டது. இங்குப் பாயும் ஆறு இரோசிமாவை ஏழு வாயில்களாகப் பிரிப்பதால் இது ஆறு தீவுகளாகப் பிரிந்துள்ளது. இவ்வேழு கிளைகள் 81 பாலங்களால் இணைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போரின்போது இரோசீமாவின் மீதுதான் முதன்முதலாக அணுக்குண்டு வீசப்பட்டது. மக்கள் நிறைந்திருந்த ஒரு பகுதியின்மீது இத்தகைய அச்சமூட்டும் குண்டு வீசப்பட்டதால், நொடிப் பொழுதில் ஏறத்தாழ 1,30,000 மக்கள்
அமைதி நினைவுப் பூங்கா-இரோசிமா
கொல்லப்பட்டோ காயமடைந்தோ காணாமற் போயோ மறைந்த வரலாற்றுக் கொடுமை, 1945–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 6–நாள் நடைபெற்றது. 90 விழுக்காடு நிலம் தரைமட்டமாகியது. மீண்டும் அணுக்குண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகி (Nagasaki) என்னும் மற்றொரு சப்பானிய நகரம் மீது வீசப்பட்டபோது, ஏறத்தாழ 75,000 மக்கள் காயம்பட்டோ கொல்லப்பட்டோ போனார்கள். 1985 ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 6–ஆம் நாள் சப்பானிய மக்கள் அணுக்குண்டு போடப்பட்ட நாற்பதாம் ஆண்டு நிறைவு நாளை நினைவுறுத்தி மறைந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 255)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rqh78aa8/
தமிழ்“இரோசிமா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rqh78aa8/APA
Oliyon Research. (2026). இரோசிமா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rqh78aa8/MLA
"இரோசிமா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rqh78aa8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment