அல் கார்டெல்
al kārṭel
அமெரிக்க அரசியல் வித்தகர், இவர் 1945–ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
அமெரிக்க அரசியல் வித்தகர், இவர் 1945–ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். 1933 முதல் 1944 வரை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வெளியுறவுச் செயலராகப் பணிபுரிந்தார். அல் கார்டெல் (Al–Cartel) முயற்சியால், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குத் தென் அமெரிக்க நாடுகளிடையேயும் அண்டைநாடுகளிடையேயும் நல்லுறவுக் கொள்கை தீவிரமாகச் செயற்பட்டது. அனைத்து அமெரிக்க நாடுகளுக்குமிடையே முழு ஒற்றுமையையும் இணக்கத்தையும் ஏற்படுத்திய பெருமை இவரைச் சாரும்.
பசிபிக்குக் கடற் பகுதியில் போர் மூள்வதை இவர் தடுக்க முயற்சிசெய்தார். சப்பான் பெர்ல் துறைமுகத்தைத் தாக்கியபோது, அதற்கு உடந்தையாய் இருந்தவர்களை இவர் சாடினார். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்னும் கொள்கையை வெளியிட்டார். உடல் நலக் குறைவின் காரணமாகத் தம் பதவியை விட்டு, 1944–இல் விலகினார்.
அல் தென்னசியைச் சார்ந்த ஓவர்ட்டன் கவுன்டியில் பிறந்து கம்பர்லாந்து சட்டப்பள்ளியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் 1907–இல் அமெரிக்க நாட்டின் பிரதிநிதிச்சபையின் உறுப்பினரானார். 1913–இல் இவர் வருமான வரிச் சட்டத்தை எழுதி முடித்தார். 1916–இல் வாரிசுரிமை வரிச் சட்டத்தையும் எழுதி முடித்தார். உட்ரோ வில்சனை (Woodrow Wilson) ஆதரித்த இவர், பன்னாட்டுப் பொருளாதாரக் கூட்டுறவு ஏற்படக் குறைந்த வரிகளே அடிப்படையாக அமைய வேண்டுமென்பதைக் கருத்தாகக் கொண்டவர்.
1920–இல் மக்களாட்சித் தேசியக் குழுவின் தலைவராகவும், 1930-இல் மேலவையின் செனட்டு உறுப்பினராகவும் இருந்த கார்டெல் 1932–இல் நடைபெற்ற மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாட்டில், பிராங்கிளீன் உரூசுவெல்ட்டு என்பார் குடியரசுத் தலைவராக நியமனம் பெற உதவினார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 839)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rgamnqd6/
தமிழ்“அல் கார்டெல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rgamnqd6/APA
Oliyon Research. (2026). அல் கார்டெல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rgamnqd6/MLA
"அல் கார்டெல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rgamnqd6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment