செர்மெட்
cermeṭ
பீங்கான், உலோகம் இவற்றின் முழுமையான கலவையால் உருவாகும் பல்வேறு கலவைப் பொருள்கள் செர்மெட்டுகள் (cermets) எனப் படுகின்றன.
பீங்கான், உலோகம் இவற்றின் முழுமையான கலவையால் உருவாகும் பல்வேறு கலவைப் பொருள்கள் செர்மெட்டுகள் (cermets) எனப் படுகின்றன.
கட்டமைப்பு (fabrication). உலோகப் பொருள், பீங்கான் பொருள் இவற்றைப் பொடியாக்கி, நன்றாகக் கலந்து, அழுத்தத்தின் மூலம் வடிவம் கொடுத்துப் பின்னர், சிட்டங்கட்டிப் போதல் மூலம் செர்மெட் உருவாக்கப் படுகிறது. ஓர் அடிப்படை உலோகமும், அதனை விடத் தூய்மையான (noble) பிறிதோர் உலோகமும் உள்ள நீர்த்த கரைசலின் உள்ளார்ந்த ஆக்சினேற்றத்தின் மூலமும், செர்மெட் உருவாகலாம். ஆக்சிஜனேற்றச் சூழலில் சூடாக்கப் படும் போது, தூய உலோகத்தின் நடு நடுவே அடிப்படை உலோகத்தின் ஆக்சைடுகள் தோன்றிப் பரவுகின்றன.
பீங்கான் என்பது உலோக ஆக்சைடு, போரைடு, சிலிசைட், நைட்ரைட் போன்ற ஏதேனும் ஒன்றாகவோ, பலவற்றின் கலவையாகவோ இருக்கலாம். செர்மெட்டின் பயன்பாட்டைப் பொறுத்து, தேவை- யான உலோகம் தேர்ந்து எடுக்கப்படுகிறது. சில வகைச் செர்மெட்களும் அவற்றின் தனிமக் கூறுகளும் அட்டவணையில் தரப் பட்டுள்ளன.
டைட்டேனியம் போரைடு
இரும்பு, நிக்கல், கோபால்ட்
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> கலவையின் போது, நிகழும் வேதியியல் மாற்றத்தைப் பின் வரும் வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒத்த தன்மையற்ற கலவையில், பீங்கான் பொருளுக்கும், உலோகப் பொருளுக்கும் இடையே வேதியியல் மாற்றம் நிகழ்வதில்லை. புதிய பொருள் உருவாகாமல், எந்திரவியல் முறைப்படி பீங்கானுக்கும், உலோகத்துக்கும் இடையே ஒரு பிடிப்பு மட்டும் ஏற்படுகிறது. எ-டு: MgO-Ni கலவை பரப்பில் மட்டும் இரு பொருள்களும் இணைந்து, இரண்டிலும் கரையாத ஏதேனும் புதுப் பொருளை உருவாக்குகின்றன. எ-டு: Al₂O₃–Be கலவை. முழுமையாக ஒன்றில் மற்றொன்று கரைந்து ஒரு புதிய திண்ம நிலைக் கரைசலை உருவாக்கலாம். எ-டு: TiC–Ni கலவை மணி வரம்புகளில் மட்டும் மாற்றம் நிகழலாம். எ-டு: Al₂O₃– MO கலவை
கட்டுமானத்தின் தன்மை. கட்டுமானம் என்பது பீங்கான் பொருளும், உலோகப் பொருளும் ஒன்றை ஒன்று பற்றி வலிமையேற்கும் விதத்தைக் குறிக்கிறது. இது பரப்பு வேதியியல் மாற்றத்தினாலோ, முழுமையான வேதியியல் மாற்றத்தினாலோ நிகழலாம்.
உலோகம் மற்றும் பீங்கானின் கலவையினால் உருவாவதால், செர்மெட்டுகள் மிகு வலிமை உடையனவாகவும் உயர் வெப்பத்திலும் செயல் படக் கூடியவையாகவும், மிகு தேய்வு எதிர்ப்பு உடையனவாகவும், அரிப்பு எதிர்ப்பு உடையனவாகவும் உள்ளன.
பயன்பாடு. உராய்வுப் பகுதிகள், துளைக் கருவிகள், வெட்டுக் கருவிகள் ஆகியவற்றின் தயாரிப்பில் செர்மெட்டுகள் பயன்படுகின்றன. அணு மின் நிலையங்களில் பயன்படும் சில பொருள்களும் செர்மெட்டுகளால் ஆனவை.
இழை வலிவூட்டல் (fibre reinforcement). இவ்வகைச் செர்மெட்டுகளில் பீங்கான் பொருள்களுக்கு உலோக இழைகளின் மூலம் வலிவூட்டி மின் கடத்துந் தன்மையை உயர்த்தலாம். அல்லது உலோகப் பொருளின் உள் பீங்கான் இழைகளைப் பொருத்தி, உயர் வெப்ப நிலையில் செயல் படத் தேவையான தகுதியை ஊட்டலாம். இந்த இழைகள் ஏறக் குறைய (0.5–2.5) 10-6 மி.மீ. நுண்ணளவு வரை விட்டம் உள்ள சிறு கம்பிகள் ஆகும். —வயி. அண்ணாமலை —வி. சண்முகசுந்தரம் நூலோதி. J.C. Kuriacose and J.Rajaram, Chemistry in Engineering and Technology, Tata McGraw-Hill Publishing Co. Ltd, New Delhi, 1984.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 827)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rg7bdnbt/
தமிழ்“செர்மெட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rg7bdnbt/APA
Oliyon Research. (2026). செர்மெட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rg7bdnbt/MLA
"செர்மெட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rg7bdnbt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment