சூரியத் திருப்பு நிலை
cūriyat tiruppu nilai
புவியின் சுற்று வழி இயக்கத் தளத்திற்கு அதன் அச்சு சாய்வு நிலையிலிருப்பதால், ஏற்படும் பருவ கால மாறுதல்களைக் கொண்டும், புவி சூரியனைச் சுற்றுவதால் உண்டாகும் இரவு, பகல் நேரங்களில், சூரிய வெப்ப நிலையில் ஏற்படும் மாறுதல்களைக் கொண்டும், ஓர் ஆண்டின் பருவ காலம் கோடைக் காலம், குளிர் காலம் மழைக் காலம், இலையுதிர் காலம் என நான்கு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மார்ச் திங்கள் 21 ஆம் நாள் வான நடுவரையில் (celestial equator) உள்ள சூரியன் தன் தோற்றப் பாதையில் (ecliptic) வடகோளத்தில் சென்று, ஜூன் 21 அல்லது 22 ஆம் நாள் (லீப் ஆண்டைப் பொறுத்து) நண்பகல் நேரத்தில், நடு வரையிலிருந்து மீப்பெரு உயரத்தை அடைந்து, அந்நிலையிலேயே சில நாள் இருக்கும். கடக ரேகையும் உச்சி வட்டமும் சேரும் இந்நிலை சூரியத் திருப்பு நிலை (solstice) எனப்படும். லத்தீன் மொழியில் சால்ஸ்டிஸ் என்னும் சொல் சூரியனையும், நிற்பதையும் (to stop) குறிக்கும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வட கோளத்தில், இக்காலம் நல்ல கோடைக் காலமாக இருப்பதால், இந்நிலை கோடைத் திருப்பு நிலை (summer solstice) எனக் குறிக்கப்படும். பின்னர், சூரியன் செப்டம்பர்த் திங்கள் 22 அல்லது 23 ஆம் நாள் நடு வரையை அடைந்து, தென்கோளப் பகுதிக்குச் செல்லும். டிசம்பர்த் திங்கள் 22 அல்லது 23 ஆம் நாள் மீப்பெரு மதிப்பை அடைந்து, மகர ரேகையை அடையும். இந்நிலை குளிர் காலத்தில் வருவதால், இதைக் குளிர் திருப்பு நிலை (winter solstice) என்பர். மீண்டும், வடக்கே நகர்ந்து, மார்ச் 21 ஆம் நாள் நடு வரையை அடையும். கோடைத் திருப்பு நிலை, குளிர் திருப்ப நிலை இரண்டும் திருப்புப் புள்ளிகள் (solstitial points) ஆகும். திருப்புப் புள்ளிகளில் இருக்கும் போது, சூரியனின் மீப்பெரு கோணத் தொலைவு (angular distance)ல = 23°5' ஆகும். —பங்கஜம் கணேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 634)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rfpnhgb8/
தமிழ்“சூரியத் திருப்பு நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rfpnhgb8/APA
Oliyon Research. (2026). சூரியத் திருப்பு நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rfpnhgb8/MLA
"சூரியத் திருப்பு நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rfpnhgb8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment