விரும்பாத, வேண்டாத குழந்தைகளைக் கை விடுதல், இந்தியாவில் குறைந்தளவில் நடைபெறுகிறது. 12 வயதுக்குட்பட்ட குழந்தையைத் தாயோ, தந்தை யோ, குழந்தைக்குப் பொறுப்பானவரோ, கவனிக்காத நிலையில் குழந்தையைக் கை விடும் இவ்வழக்கம் தண்டனைக்குரியதாகும். இதற்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும். இவ்விதம் விடப்பட்ட குழந்தை இறந்து விட்டால், குற்றவாளி இந்தியக் குற்ற இயல் பிரிவு 317இன் படி, கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுவார். சமூக, பொருளாதாரச் சிக்கல்கள், ஏழ்மை, குழந்தையின் ஊனம் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். —மு. ப. கிருஷ்ணன் நூலோதி. K. S. Narayanan Reddy, The Essentials of Forensic Medicine and Toxicology, Ninth Edition, Sri Lakshmi Art Printers, Hyderabad, 1985.