சுருள் புள்ளி
curuḷ puḷḷi
வளையப் புள்ளி நோய் (ring spot) அல்லது சுருள் புள்ளி என்பது வைரசால் பயிரில் தோன்றும்.
வளையப் புள்ளி நோய் (ring spot) அல்லது சுருள் புள்ளி என்பது வைரசால் பயிரில் தோன்றும். சில வைரஸ்கள் இலைகளில் வெளுத்த அல்லது காய்ந்த சுருள் புள்ளிகளைத் தோற்றுவிக்கும். இப்புள்ளிகள் பெரும்பாலும் ஒன்றோடொன்று இணைந்து, அடுக்கிய வளையங்கள் போன்று காணப்படும். சிலவற்றில் காய்ந்த வளையங்கள், வெளுத்த வளையங்கள் ஆகிய இரண்டும் ஒரே சுருள் புள்ளியில் மாறி மாறியிருக்கும்.
நிலக் கடலைப் பயிரில் சுருள் புள்ளிகளைத் தோற்றுவிக்கும் தேமல் தோன்றுகின்றது. இந்தியாவில் 1952ஆம் ஆண்டு இந்நோய் முதல் முதலாகத் தோன்றியதாக அறியப்பட்டுள்ளது. இந்நோயின் அறிகுறியாக முதலில் விரியாத இலைகளில் வெளிர் பச்சை நிறப் புள்ளிகளைக் காணலாம். பின்பு, இவை வெளிர் பச்சை நிறச் சுருள் புள்ளிகளாக மாறி, இலையின் பெரும் பகுதியையும் அழித்து விடும். வைரஸ் வகையைப் பொறுத்து, திசுக்கள் அழிக்கப்படும் அளவு மாறுபடும். பாதிக்கப்பட்ட இளம் இலைகள் காய்ந்து விடுகின்றன. தீவிர வகை, வைரசால் தாக்கப் பட்டால், செடியின் நுனியிலுள்ள மொட்டுகளும், இளம் இலைகளும் 10—15 நாள்களில் காய்ந்து விடுகின்றன. தீவிரமற்ற வைரஸ் வகையினால் நோயுற்ற செடிகளின் இலைகள் காய்ந்து விடாமல், தேமல் அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. இந்நோய் இலைப் பேன் மூலமாகப் பரவுகிறது.
நிலக்கடலையை 15X15 செ.மீ. இடைவெளியில் விதைத்தும், விதைத்த 30 நாளில் மோனோகுரோட்டோபாஸ் ஹெக்டேர் ஒன்றுக்கு 500 மி.லி. வீதம் தெளித்தும், இந்தோய் பரவுதலைக் குறைக்கலாம். விதைத்த 45 நாள் வரை நோயுற்ற செடிகளைப் பறித்து அழித்து விடுவதாலும், நோய் பரவுதலைக் குறைக்கலாம். —கா. சிவப்பிரகாசம்
<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து, ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 521)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/re93kg4n/
தமிழ்“சுருள் புள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/re93kg4n/APA
Oliyon Research. (2026). சுருள் புள்ளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/re93kg4n/MLA
"சுருள் புள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/re93kg4n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment