சூரியக் காற்று
cūriyak kāṟṟu
சூரிய மண்டல உச்சியிலிருந்து ஒலியின் வேகத்தை விட, மிகு வேகத்தில் வெளிப்படும் தொடர்ச்சியான பிளாஸ்மா வெளியீடே சூரியக் காற்று (solar wind) எனப்படும்.
சூரிய மண்டல உச்சியிலிருந்து ஒலியின் வேகத்தை விட, மிகு வேகத்தில் வெளிப்படும் தொடர்ச்சியான பிளாஸ்மா வெளியீடே சூரியக் காற்று (solar wind) எனப்படும். புவிக்கு அப்பால் உள்ள சூரிய மண்டலப் பகுதிகளையும் இக்காற்று ஊடுருவிச் செல்லும். புவியின் சுற்றுப் பாதையில் சூரியக் காற்று புரோட்டான்களையும், எலெக்ட்ரான்களையும் கொண்டுள்ளது. அத்துகள்களின் சராசரி இயக்க வெப்ப நிலை 100000K ஆகும். அவை, ஒரு சதுர செ.மீ. பரப்பில் 10 துகள் என்னும் சராசரி அடர்த்தியையும், நொடிக்குப் பல நூறு கிலோ மீட்டர் வேகத்தையும் கொண்டிருக்கும். ஆர வழிக்குக் குறுக்குத் திசையில், திசை வேகம் 110 கி.மீ. நொடிக்கும் குறைவாக இருக்கும். பிளாஸ்மா துகள்களின் மோதலிடைத் தொலைவு மிகுதியாக இருப்பதால், அவற்றில் மோதல் இல்லை எனக் கொள்ளலாம். அவற்றின் நீள மற்றும் காலப் பரிமாணங்களில் பெரும் மாறுதல்களை உண்டாக்குவதால், சூரியக் காற்று சீரற்ற குழப்ப நிலையில் இருக்கும்.
சூரிய ஒளி வட்டத்திலுள்ள 10'K வரை உள்ள மிக அதிக வெப்ப நிலையே இவற்றின் அதிகமான திசை வேகத்திற்குக் காரணமாகும். ஒளி வட்டத்தை நிலையான சம நிலையில் வைத்திருக்க, சூரிய ஈர்ப்புப் புலம் போதுமானதாக இல்லை. 1957இல் ஈ.என்.பார்கர், பாய்மச் சமன்பாடுகளைப் பயன்படுத்தி, சூரிய ஒளி வட்டம் மிகு வேகத்துடன் விரிவடையும். போது சூரியக் காற்று உருவாகிறது எனக் காட்டினார். இச்சமன்பாடுகளைக் கணிப்பொறி உதவியால்தான் தீர்வு செய்ய இயலும். இச்சமன்பாடுகளின் தீர்விலிருந்து, சூரியக் காற்றின் ஓட்டம் சூரியனிலிருந்து குறை வேகத்துடன் முடுக்கமடைந்து, 10–20 மடங்கு சூரிய ஆரத் தொலைவில் ஒலியின் வேகத்தைக் கடந்து, குரியனிலிருந்து மிகு தொலைவில் நொடிக்கு 350–450 கி.மீ வேகத்தில் மாறாமல் செல்கிறது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> 50–100 A.U. தொலைவில் (1A.U. தொலைவு = 1,495 × 10⁸ கி.மீ) விண் மீன்களுக்கு இடைப்பட்ட ஊடகத்தின் தடையுறு விசையால் வேகம் குறைகிறது. தற்போது கிடைத்த கருத்துகளின்படி, சூரியக் காற்றின் ஓட்டம் ஒலியின் வேகத்தை விடக் குறையும் போது, ஒரு நிலையான அதிர்ச்சி அலை உருவாகிப் பின்னர், பிளாஸ்மாவை வெப்பப் படுத்துகிறது. இதன் பின், சூரியக் காற்றுத் துகள்கள் விண் மீன்களுக்கு இடைப்பட்ட வளிமத்துடன் இணைந்து விடும்.
சூரியனிலிருந்து வெளிவரும் சூரியக் காற்று, தன்னுடன் சூரியக் காந்தப் புலக் கோடுகளையும் இழுத்து வருகிறது. அதன் இயக்க ஆற்றல் அடர்த்தி ½PV², காந்தப்புல ஆற்றல் அடர்த்தி B²/8πஐ விட மிகுதியாதலால், காந்தப் புல விசைகள் சூரியக் காற்று ஓட்டத்தைப் பாதிப்பதில்லை. V₀ மதிப்புள்ள சீரான வேகத்துடன் இயங்கும் சூரியக் காற்றின் புல அமைப்பைக் கணக்கிட்டால். அப்புலம் சூரியனுக்குப் பக்கத்தில் r₀ ஆரமுள்ள ஆர வடிவமாகக் காணப்படும். புல விசைக் கோடுகள் சுருள் கோடுகளாக உள்ளன. அச்சுருள் கோடுகளின் முறுக்கு, சூரியச் சுழற்சியால் ஏற்படுவதாகும். புவியின் சுற்றுப் பாதை அருகில், சராசரிப் புலம் 5×10-5G அளவிலும், ஆர வழித் திசையுடன் -45° சுருள் கோணத்திலும் இருக்கும். இப்புலத்தின் திசை பல நாள் மாறாமல் இருக்கும். சூரியனின் நடு வரைத் தளத்தில் சூரியக் காற்றின் வரைபடம் தரப்பட்டுள்ளது. இப்படம் புவியில் காணப்படும் சூரியக் காற்றுப் பண்புகளை விளக்கும். ஆயினும், புவியில் அளக்கப்பட்ட சூரியக் காற்று குழப்ப நிலையிலும், காலம் மற்றும் அளவில் மாறுபட்ட நிலையிலும் உள்ளது.
சூரியக் காற்றில் ஏற்படும் மாறுபாடுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை, 11 ஆண்டு சூரியச் சுழற்சியுடன் இணைந்த மாறுபாடு. சூரியக் காற்று வேகமான, மெதுவான கற்றைகளால் வெளி விடப்பட்டுச் சூரியச் சுழற்சியால் அவை ஒன்றோடொன்று இடையீட்டு நிகழ்வை உண்டாக்குகின்றன.
இரண்டாம் வகையில், நிலையற்ற மாறுபாடுகள் சூரியனில் தொடங்கி, பாய்மத்தின் வழியே பரவுகின்றன. சூரிய வெடிப்பால் ஏற்படும் அலை சூரியனில் தொடங்கி. சூரிய மண்டலத்தில் பல நிலையற்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனால் ஏற்படும் ஆற்றல் ஏறத்தாழ 1032 எர்க் ஆகும்.
மூன்றாம் வகையில் பாய்மத்தில் உண்டாகும் குழப்ப அலைகளில், சில மணித் துளி அளவு குறைந்த காலத்தில் உண்டாகும் மாறுபாடு ஏற்படும். சூரியனிவிருந்து வெளிச் செல்லும் ஆல்ஃபன் அலைகளால் இம்மாறுபாடு ஏற்படுகிறது.
விண்வெளி ஆய்வுக் கலங்களைப் பயன்படுத்தி, கடினமான விண்வெளி நிகழ்வுகளை ஆராயப் பயன் படும் ஆய்வுக் கூடமாகச் சூரியக் காற்று பயன்படுகிறது. இதுவே சூரியனில் நடைபெறும் நிகழ்வுகளைப் புவிக்குக் கொண்டு வரும் ஊடகமாகவும் செயல்படுகிறது. அதிர்வு அலைகளால் உண்டாக்கப் படும் வெடிப்பு, புவிக்குக் கடத்தப்பட்டுக் காந்தப் புயல்களையும், துருவ ஒலியையும் (aurorae) உண்டாக்கும். —வெ. ராதாகிருஷ்ணன் சூரியக் காற்றின் திசை வேகம் (velocity) 500 கி.மீ./நொடி; அடர்த்தி 5 அயன்கள்/க.செ.மீ. ஆகும். இக்காற்றினால், சூரிய மண்டலத்தில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. புவியைச் சுற்றியுள்ள காந்தப் புல மண்டலம், சூரியக் காற்றினால் மிகவும் சிறு பகுதியாக மாற்றமடைந்தாலும், இந்தக் காற்று புவியை அடையாதவாறு தடுக்கிறது. ஆனால், சந்திரனுக்குக் காந்த வெளி இல்லாமையால், சூரியக் காற்றுத் துகள்கள் அதன் பரப்பின் மேல் படிகின்றன. அப்பலோ 11, 12இல் சென்ற விண்வெளி வீரர்கள் சந்திரப் பரப்பில் பெரிய அளவுகளில் உலோகத் தடுப்புகளை வைத்து, காற்றுத் துகள்களைச் சேகரித்துப் புவிக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.
வால் விண் மீன்களில் கூட, சூரியக் காற்றின் விளைவுகளால் நீளமான, நேரான வால் போன்ற பகுதிகள் ஏற்படுகின்றன. இதை அயன் வால் எனக் குறிப்பிடுகின்றனர். விண் மீன்களிலிருந்து கூட வளிமங்கள் வெப்பமாக வெளி வருவதாகக் கண்டு பிடித்துள்ளனர். இதனை விண் மீன் காற்று (stellar wind) என்று குறிப்பிடுகின்றனர். —பங்கஜம் கணேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 619)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/re29nejc/
தமிழ்“சூரியக் காற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/re29nejc/APA
Oliyon Research. (2026). சூரியக் காற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/re29nejc/MLA
"சூரியக் காற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/re29nejc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment