நோய்த் தடுப்பூசி
nōyt taṭuppūci
கால்நடைகளுக்கு நோய் வரும் முன்னர், தடுப்பூசிகள் அளிப்பதே சாலச் சிறந்த முறையாகும்.
கால்நடைகளுக்கு நோய் வரும் முன்னர், தடுப்பூசிகள் அளிப்பதே சாலச் சிறந்த முறையாகும். இது குறிப்பாக, வைரஸ் நோய்களுக்கு மிகவும் பொருந்தும். கால்நடைகளைத் தாக்கும் முக்கிய நுண்ணுயிர் மற்றும் வைரஸ் நோய்களுக்குப் பின் வரும் தடுப்பூசிகள் உள்ளன. சப்பை நோய், அடைப்பான் நோய், தொண்டை அடைப்பான் நோய், கருச் சிதைவு நோய், வெக்கை நோய், அம்மை நோய், கோமாரி நோய், வெறி நோய் ஆகியவற்றிற்குத் தடுப்பூசிகள் உள்ளன. கோழிகளைத் தாக்கும் கழிச்சல் நோய், அம்மை நோய், சிறுமூச்சுக் குழல் நோய், பெருமூச்சுக் குழல் நோய், பர்சா நோய்,கோழிக் காலரா ஆகியவற்றிற்கும் தடுப்பூசிகள் உள்ளன. நாய்களுக்கு உண்டாகும் வெறி நோய், டிஸ்டெம்பர் நோய்,பார்வோ நோய், லெட்டோஸ்பைரோசிஸ் ஆகியவற்றிற்கும் தடுப்பூசிகள் உள்ளன.
தடுப்பூசிகளைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். அவை உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு தயாரிக்கப் படும் தடுப்பு மருந்து, செயலற்றதாக்கப் பட்ட நோய் நுண்ணுயிரிகளைக் கொண்டு தயாரிக்கப் படும் தடுப்பு மருந்து, நோய் நுண்ணுயிரிகள் உற்பத்தி செய்யும் நச்சுப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து ஆகியனவாகும். வைரஸ் நோய்களுக்குப் பெரும்பாலும், உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு தயாரிக்கப் படும் தடுப்பு மருந்தே பயன் படுகிறது. அதாவது, வீரியம் குறைந்த நோயுண்டாக்காத நச்சுயிரிகளைக் கொண்டு, தடுப்பு மருந்து தயாரிக்கும் முறையில் நச்சுயிரிகளைப் பல முறை திசுக்களில் செலுத்தி, அல்லது நோயினால் பாதிக்கப்படாத விலங்கு வகைகளில் செலுத்தி, அவற்றின் வீரியத்தைக் குறைக்கலாம். இம்முறையில் செலுத்தப்பட்ட நோய் நுண்ணுயிரிகள் நோயுண்டாக்கா. ஆனால், எதிர்ப்பாற்றல் அளிக்கும் தடுப்பு மருந்துகளாக உதவும்.
செயலற்றதாக்கப் பட்ட தடுப்பு மருந்தில், பல்வேறு வித வேதிப் பொருள்களைப் பயன் படுத்தி, அவற்றினைச் செயலற்றதாக்கித் தடுப்பு மருந்தாக மாற்றலாம். உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு அளிக்கப்படும் தடுப்பு மருந்தினை விட வீரியமுடனும், நீண்ட காலம் நோய் எதிர்ப்புத் திறனுடனும் விளங்கும். இந்தத் தடுப்பூசிகளைத் தகுந்த காலத்தில், தக்க அளவில் அளித்து, நோய் எதிர்ப்புத் திறனைக் கால்நடைகளிலும், கோழியினங்களிலும் உண்டாக்க முடியும்.
வலிப்பு நோய், சப்பை நோய், துள்ளுமாரி நோய் ஆகியவற்றிற்கு நோய் நுண்ணுயிரி உற்பத்தி செய்யும் நச்சுப் பொருள்களைக் கொண்டு, தடுப்பு மருந்து தயாரிக்கப் படுகிறது. இந்நச்சுப் பொருள்கள் பார்மலின், கார்பானிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டு, நச்சுத் தன்மையினை முறித்துத் தடுப்பு மருந்துகளாகத் தயாரிக்கப் படுகின்றன. —வே. புருஷோத்தமன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 341)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rdtzbtah/
தமிழ்“நோய்த் தடுப்பூசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rdtzbtah/APA
Oliyon Research. (2026). நோய்த் தடுப்பூசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rdtzbtah/MLA
"நோய்த் தடுப்பூசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rdtzbtah/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment