அண்டார்க்டிக்காப் பெருங்கடல்
aṇṭārkṭikkāp peruṅkaṭal
அண்டார்க்டிக்காப் பெருங்கடல் என்பது பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் தென் பகுதிகளையும் குறிப்பதாகும்.
அண்டார்க்டிக்காப் பெருங்கடல் என்பது பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் தென் பகுதிகளையும் குறிப்பதாகும். ஏனெனில், இம்மூன்று கடல்களும் அண்டார்க்டிகா (Antarctica)வைச் சூழ்ந்துள்ளன. ஏனைய கண்டங்களின் நிலப் பரப்பிலிருந்து அறுபடாமல் அண்டார்க்டிக்குப் பெருங்கடலின் (Antarctic Ocean) குறுகிய இடுக்காக அமைவது திரேக்கு (Drake) நீர்வழியாகும். இந்நீர்வழி 1112 கி.மீ. அகலமுடையது. இப்பெருங்கடலில் நில அமைப்பில் கண்டத்திட்டு ஒன்று உள்ளடங்கியுள்ளது இதனை வெட்டல், இராசு (Weddell & Ross) கடல்களுக்கு அருகில் காணலாம். இதற்கு வடக்கில் அமைந்துள்ள பகுதிகள் 4500 மீ. ஆழமுள்ளவை. மலை முகடுகள், மேட்டு நிலங்கள், கடல் அகழிகள் போன்ற பல இயற்கைக் கூறுகளை அண்டார்க்டிகாவில் காணலாம்.
அண்டார்க்டிகாவின் நீரோட்டங்கள் சிக்கல் நிறைந்தவை. இங்கிருந்து பாய்ந்து வரும் குளிர்ந்த நீரோட்டம், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து தெற்காகப் பாயும் வெப்ப நீரோட்டங்களுடன் கலக்கிறது. இவ்விருவகை நீரோட்டங்களும் சந்திக்குமிடத்தில் ஓருயிர்மக் (Single Cell) கொடிகள் வளரும். இக்கடலின் அடியில் பல வகையான மீன்களும் பிற நீர்வாழ் இனங்களும் வாழ்கின்றன. அண்டார்க்டிக் பெருங்கடலைத் தென் பெருங்கடல் (Southern Ocean) என்றும் கூறுகிறார்கள்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 285)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r8hmqc44/
தமிழ்“அண்டார்க்டிக்காப் பெருங்கடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r8hmqc44/APA
Oliyon Research. (2026). அண்டார்க்டிக்காப் பெருங்கடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r8hmqc44/MLA
"அண்டார்க்டிக்காப் பெருங்கடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r8hmqc44/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment