கந்த புராணம்
kanta purāṇam
பொருள்கள் · Senses
1.
இது கச்சியப்ப சிவாசாரியரால் பாடப்பட்டது. முருகப் பெருமான், 'திகடச் சக்கரம்' என்று தொடங்கிக் கொடுக்க அதனையே முதலாகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது. இது 1. உற்பத்தி காண்டம், 2. அசுர காண்டம், 3. மகேந்திர காண்டம், 4. யுத்த காண்டம், 5.தேவகாண்டம், 6. தட்சகாண்டம் என்ற ஆறு காண்டங்களைக் கொண்டது. இதில் 10346 செய்யுட்கள் உண்டு. கந்தப் பெருமானது வரலாற்றை அறிவிக்கும் பரந்த நூல். இது சைவ சமயச் சிறப்பினையும் சிவபரத்துவத்தையும் பல நீதிகளையும் கொண்டு திகழ்வது. காம லீலைகளைப் பற்றிய சில குறிப்புக்களும் இதில் உள்ளன. இதன் நடையும் சுவையும் கதலி பாகம் போன்றது. காலம் கி.பி. 12- ஆம் நூற்றாண்டு. கச்சியப்ப சிவாசாரியார் தினம் தினம் பாடல்களைப் பாடிக் குமரப் பெருமான் திருவடிகளில் வைத்துத் திருக்கோயிலைத் தாளிட்டுச் சென்று மறுநாள் கோவிலைத்திறந்து அப்பாடல்களைப் பார்க்கும் போது அப்பாடல்கள் முருகப் பெருமானால் திருத்தப் பட்டிருக்கும் என்று கூறப்படுவதால் இந்நூலின் பெருமையினை மேலும் கூறவேண்டா அன்றே?
2.
முருகன் புகழ் புகல்வது. அரும்பெரும் புராணம் 3 இல் ஒன்று. பொதுப் புராணம் 18 இல் ஒன்று.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r7u8utfx/
தமிழ்“கந்த புராணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r7u8utfx/APA
Oliyon Research. (2026). கந்த புராணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r7u8utfx/MLA
"கந்த புராணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r7u8utfx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment