அடோனிசு
aṭōṉicu
இவன் கிரேக்கப் புராணங்களில் வரும் ஓர் அழகிய இளைஞன்.
இவன் கிரேக்கப் புராணங்களில் வரும் ஓர் அழகிய இளைஞன். இவன் தந்தை பெயர் கினிராசு (Cinyras). அப்ரோடைட்டி என்னும் அன்புத் தேவதை இவன் மீது காதல் கொள்கிறாள். இவள் உரோமானியப் புராணங்களில் வீனசு (Venus) எனக் குறிக்கப்படுகிறாள். வேட்டையில் விருப்பமிக்கவன் அடோனிசு (Adonis), அப்ரோடைட்டி, வேட்டையில் ஏற்படும் இன்னல்கனை அவனிடம் கூறி அடோனிசை வேட்டைக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்துகிறாள். அவளது சொல்லைக் கேளாது வேட்டைக்குச் சென்ற அடோனிசை ஒரு காட்டுப் பன்றி கொன்று விடுகிறது. அப்ரோடைட்டி மிகுந்த துயருற்று அவனது குருதியைச் சேகரித்து ஒரு மலராக மாற்றுகிறாள். இம்மலர் ‘அனெமொனி’ (Anemone) அல்லது காற்று மலர் எனக் கூறப்படும். பின்னர்ப் பாதாள உலகத்துப் பெண் ஒருத்தி அடோனிசை உயிர்பெறச் செய்கிறாள். அதற்காக அடோனிசு அவளுடன் பாதாள உலகத்தில் ஆறு மாதம் தங்கவேண்டியவனாகிறான். அடுத்த ஆறு மாதத்தை அவன் அப்ரோடைட்டியுடன் கழிக்கிறான்.
நேப்பிள்சில் உள்ள அடோனிசு சிலை
அடோனிசைப் பற்றியும் வீனசைப் பற்றியும் பல கவிஞர்கள் கவிதைகள் எழுதியுள்ளனர். சேக்சுபியரின் ‘வீனசும் அடோனிசும்’ என்ற கவிதை கிரேக்கப் புராணத்தின் அடிப்படையை வைத்து எழுதப்பட்டது. இப்புராணக் கதை பருவங்களின் மாறுதலை அறிவிக்கும் கதை என்று கூறுவார்கள்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 281)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r6nhwp2c/
தமிழ்“அடோனிசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r6nhwp2c/APA
Oliyon Research. (2026). அடோனிசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r6nhwp2c/MLA
"அடோனிசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r6nhwp2c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment