உத்தானபாதன்
uttāṉapātaṉ
சுவாயம்பு மநுவிற்கும் சதரூபை என்பவளுக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவன்.
சுவாயம்பு மநுவிற்கும் சதரூபை என்பவளுக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவன். இவனுடைய அண்ணன் பெயர் பிரியவரதர். இவர்கள் இருவரும் வாசுதேவருடைய கூறாக விளங்கினார்கள். உலகத்தைப் பார்ப்பதில் நோக்கமுடையவர்களாக இருந்தார்கள். அரச மரபில் உதித்த உத்தானபாதனுக்குச் சுநீதி, சுருசி ஆகிய இரண்டு துணைவியர் இருந்தனர். இவனுக்குச் சுநீதியின் மூலம் துருவன் என்ற மகனும் சுருசியின் மூலம் உத்தமன் என்ற மகனும் இருந்தனர். இவன் சுநீதியிடம் அன்பில்லாமல் சுருசியிடத்தில் மிகவும் அன்புள்ளம் கொண்டவனாக இருந்தான். ஒரு சமயம் சுருசியின் மகனாகிய உத்தமன் தன் தந்தையின் இருக்கையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது துருவனும் தன் தந்தையின் இருக்கையில் அமர்ந்து விளையாடச் சென்றான். அரசன் அவனைப் பொருட்படுத்தவில்லை. சுருசி துருவனை நோக்கி நீ என் வயிற்றில் பிறவாமையினால் அரசனுடைய ஆசனத்தில் ஏறுவதற்குத் தகுதியற்றவன். ஆகையினால் தவத்தினால் திருமாலை வழிபட்டு அவருடைய அருள் பெற்று என்னுடைய வயிற்றில் பிறந்தால் உனக்குச் சிம்மாசனம் கிடைக்கும் என்று அரசன் முன்பாகச் சொன்னாள். இதைக் கேட்டும் தந்தை வாளாவிருந்ததை அறிந்து மிகவும் வேதனைப்பட்டுத் துருவன் திரும்பினான். பின்னர்த் தாயின் அறிவுரைப்படி துருவன் நாரதரின் உபதேசம் பெற்று மதுவனஞ் சென்று நாராயணனைத் தியானித்தான். தன் மகன் வனத்திற்குச் சென்றமையால் அரசன் கவலை கொண்டிருந்தான். அப்பொழுது நாரதர் சென்று உன் மகனைத் தேவர்கள் காப்பாற்றுவார்கள்; உனக்குக் கவலை வேண்டாம் என்று கூறித் தேற்றினார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 891)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r5wcxsp9/
தமிழ்“உத்தானபாதன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r5wcxsp9/APA
Oliyon Research. (2026). உத்தானபாதன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r5wcxsp9/MLA
"உத்தானபாதன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r5wcxsp9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment