இராபின்சன், எட்வர்டு சூவிட்டு
irāpiṉcaṉ, eṭvarṭu cūviṭṭu
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் தமிழிலுள்ள இலக்கியச் சிறப்பினையும் அறக்கருத்துகளின் மாட்சியையும் அறிந்து, அவற்றை மேனாட்டவர் குறிப்பாக, ஆங்கிலேயர் உணரும்படி ஆங்கிலத்தில் நூல் எழுதிய ஆங்கிலேயர்களுள் ஒருவர்.
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் தமிழிலுள்ள இலக்கியச் சிறப்பினையும் அறக்கருத்துகளின் மாட்சியையும் அறிந்து, அவற்றை மேனாட்டவர் குறிப்பாக, ஆங்கிலேயர் உணரும்படி ஆங்கிலத்தில் நூல் எழுதிய ஆங்கிலேயர்களுள் ஒருவர். இவர் ‘தமிழ் ஞானம்’ எனப் பொருள்படும் (Tamil Wisdom) பெயரில் கி.பி. 1873–ஆம் ஆண்டில் ஒரு ஆங்கில நூலினை எழுதியுள்ளார். இவர் (Robinson Edward Jewitt) தமிழகத்தில் தொண்டு புரிந்து நம் தாயகமாகிய இங்கிலாந்திற்குச் சென்றவராவார். இந்த நூல் தமிழின் உயர்வினை மேனாட்டவர்கள் உணர்வதற்கு உதவியாக அமைந்த ஆங்கில நூல்களுள் ஒன்றாகும். இது இலண்டன் மாநகரில் உள்ள ‘வெசிலியன் கான்பரன்சு’ அலுவலகத்தால் (Weslyan Conference Office, London) எலிசா ஊல் (Eliza Hoole) என்பவரின் முன்னுரையோடு வெளியிடப்பட்டது. தமிழகத்திலிருந்த இந்து சமய ஞானியர் சிலரின் மரபும், அவர்களுடைய நூல்களிலிருந்து தொகுத்த சில பாடல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இதன் முதல் பகுதி தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் பற்றிக் கூறுகிறது. இதனை அடுத்து, புறச்சாதிக் குழந்தைகள், திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு, திருவள்ளுவமாலை, திருக்குறளின் அறத்துப்பால், ஒளவையின் வாழ்க்கை வரலாறு, மூதுரை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஆகியன ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இறுதியில் ‘மரியாதை ராமன்’ என்னும் நாட்டுப்புறக் கதைப்பாடல் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது.
இந்த நூலை 1937–ஆம் ஆண்டில் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் முகவுரையோடும், நூலுள் மொழி பெயர்த்தமைக்கப்பட்டுள்ள செய்யுள்களின் தமிழ் மூலப் பாடலோடும் வெளியிட்டுள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 91)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r4wchwhd/
தமிழ்“இராபின்சன், எட்வர்டு சூவிட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r4wchwhd/APA
Oliyon Research. (2026). இராபின்சன், எட்வர்டு சூவிட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r4wchwhd/MLA
"இராபின்சன், எட்வர்டு சூவிட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r4wchwhd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment