அமைப்புக் கிளைமொழியியல்
amaippuk kiḷaimoḻiyiyal
ஒரு மொழிக்கு எத்தனை கிளைமொழிகள் உள்ளன என்பது அம்மொழி எவ்வளவு மக்களால் எவ்வளவு காலமாக எந்தெந்த இடங்களில் பேசப்படுகிறது என்பதனைப் பொறுத்துள்ளது.
ஒரு மொழிக்கு எத்தனை கிளைமொழிகள் உள்ளன என்பது அம்மொழி எவ்வளவு மக்களால் எவ்வளவு காலமாக எந்தெந்த இடங்களில் பேசப்படுகிறது என்பதனைப் பொறுத்துள்ளது. ஒரு மொழியின் வழக்கில் உள்ள பல கிளைமொழிகள் ஒன்றுக்கொன்று எந்த அளவில் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளன; அமைப்பால் ஒற்றுமை உடையன எவை, வேறுபட்டன எவை என்பதை அறியவேண்டும். இதற்கு உதவியாக அமைவது அமைப்புக்கிளை மொழியியல் (Structural Dialectology) ஆகும். கிளை மொழிகளின் அமைப்பிலுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை கிளைமொழிகளை ஒப்பீடு செய்யவேண்டும்.
ஒப்புநோக்க எடுத்துக்கொள்ளப்படும் கிளைமொழிகள் அனைத்தும் ஒரே நெறிமுறையில் ஆராய்ந்து விளக்கப்பட்டிருக்கவேண்டும். ஒரு கிளை மொழிக்கு விளக்க மொழியியல் முறையில் இலக்கணம் அமைந்து, மற்றொரு கிளைமொழிக்கு மாற்றிலக்கண முறையில் அது அமைந்திருக்ருமானால், அவ்விரண்டினையும் ஒப்பிடுவது இயலாது. ஆதலால்தான் ஒப்புநோக்க எடுத்துக்கொள்ளப்படும் கிளைமொழிகள் அனைத்தும் ஒரே நெறிமுறையில் இலக்கணம், சொல்லகராதி முதலியவற்றைப் பெற்றிருக்கவேண்டும்.
ஒரே குடும்பத்தில் உள்ள இரண்டு அல்லது பல மொழிகளை ஒப்பிடுதல் என்பது முன்னரே ஒப்பிலக்கண முறையில் கையாளப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தைச் சார்ந்த மொழி வழக்குகளுக்குத் தமக்கென முந்திய ஒருங்கிணைத்த நிலை ஒன்று உண்டு எனக் கணித்துக்கொண்டு, ஒலிமாற்ற விதிகள் வழியாக அவற்றின் இப்பொழுதுள்ள வடிவம், முன்னர்ப் பெற்றிருந்ததாகக் கற்பனை செய்யும் வடிவம் ஆகியவற்றை நுணுகி ஆராய்ந்தனர். இதன் வாயிலாக இருமொழிகளுக்கும் உள்ள அமைப்பு, ஒலி முதலியனவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்து மொழி பயிற்றுவிக்க வழி கோலினர். இதேபோல் கிளைமொழியின் ஒப்பீட்டியலில் உள்ள குறைகளை நீக்கி அவைகளின் பொதுத்தன்மை, ஒவ்வொன்றின் பிறப்புத்தன்மை முதலியவற்றைத் தெளிவாக எடுத்துக் காட்டும் விதத்தில் ஒரு புதிய கொள்கையை வகுக்க வேண்டியது இன்றியமையாததாயிற்று. அமைப்பு மொழியியலாரின் கொள்கைப்படி, இரண்டு அமைப்புகள் முழுவதும் ஒத்தனவாக இருக்க முடியும்; அல்லது இரண்டும் மாறுபட்டனவாக இருக்க முடியும். இவற்றைத் தவிர்த்து இரண்டும் ஒரு பாதி ஒற்றுமையும் ஒருபாதி வேற்றுமையும் உடையனவாக இருக்க முடியாது என்றனர். ஆனால் ‘கிளைமொழியியல் என்பது தொடர்புள்ள மொழிக்கூறுகளையும் ஒன்றிற்கு இணையான மொழி வழக்குகளையும் கண்டறிவதாகும்’ என வில்லியம் மூல்டன் கூறுகிறார். கிளை மொழியியலின் அடிப்படைக் கொள்கையே தொடர்புடைய அமைப்பும் வேற்றுமை அமைப்பும் கலந்து விளங்குவதாகும்.
ஆதலால் அமைப்பு மொழியியலாரின் இந்த இக்கட்டான கொள்கையிலிருந்து விடுபட்டுச் செயல்திறனுடைய புதிய கொள்கை ஒன்றினை யூரில் வெயின்டிரிக்கு உருவாக்கினார். இதுவே இருமை முறை எனப்படும். இம்முறை ஒப்பீடு இரண்டு கிளை மொழிகளை ஒப்பிடமட்டுமே பயன்படும் என்று கொள்ள வேண்டியதில்லை. இம்முறையின் அடிப்படையில் பல கிளைமொழிகளையும் ஒரே நேரத்தில் ஒப்பிட்டு ஆராயலாம்.
இருமை முறை வாயிலாக இதுவரை அறிய முடியாத பல புதுச் செய்திகளை அறிய முடிகிறது. வழக்கமாக இருந்துவந்த பழைய ஒப்பீட்டுமுறை எந்த அளவு குறைபாடானது என்பதை இதன் வாயிலாக அறிந்துகொள்ளலாம். ஒரு மொழிக் கூற்றினை ஒன்றுக்கு மேற்பட்ட பல நிலைகளில் ஒப்பிடல் வேண்டும் என்று பால்மர் கூறினார். இது கிளை மொழிகளை ஒப்பிடுதலுக்கும் பொருத்தும்.
தென்னார்க்காடு மாவட்டத்தில் வழங்கும் மீனவர் பேச்சுத்தமிழ், அரிசனர் பேச்சுத்தமிழ் ஆகிய இரண்டு மொழிகளின் ஒலியன்கள், விளக்க மொழியியல் அடிப்படையில் அழைக்கப்பட்டவை. அவற்றின் துணைகொண்டு இரு கிளைமொழிகளிலும் உள்ள ஒலியன்களை இருமை முறையில் ஒப்பிட்டுக் காணலாம்.
மீனவர் பேச்சு (மீ)
அரிசனர் பேச்சு (அ)
உயிரொலியன்கள் ::{|
மெய்யொலியன்கள் ::{|
::{|
இவ்வட்டவணைகளிலிருந்து மீனவர் பேச்சில் மட்டும் / ε, i, ஜ் ஞ், ங், ற் / ஒலியன்கள் உள்ளன என்று அறியமுடிகிறது. இந்த ஒலியன்களை நீக்கிவிட்டு எஞ்சியவற்றை நோக்கினால் அவை அனைத்தும் எண்ணிக்கையாலும் இயல்பாலும் ஒத்து விளங்குகின்றன என்பது புலனாகும். இருந்தாலும் அந்த ஒப்புமை முழுமையானதா என்று காணவேண்டும். அவை உண்மையில் முழு ஒப்புமை உடையனவாக இருந்தால், அதாவது, அ, ஆ, இ என்பன இரு கிளைமொழிகளிலும் ஒன்றாக இருந்தால் – அவற்றைப் பின் வருமாறு காட்டுதல் கூடும்.
::மீ. அ. / / அ ≈ இ ≈ உ ≈ எ ≈ ஒ ≈ ஆ ≈ ஈ ≈ ஊ ≈ ஏ ≈ ஓ / /
::{|
இவ்விரு கிளைமொழிகளிலும் மேலே மூன்று எடுத்துக்காட்டுகளும் ஒத்த வடிவங்கள் போன்றுள்ளன. ஆனால், கீழே கொடுத்துள்ள பட்டியலை நோக்கும்போது அவை மாறுபடும் விதம் நன்றாகத் தெரிகிறது.
::{|
முதல் பட்டியலில் /த்/ ஒலியன் துணி, தோணி என்ற சொற்களில் இரு கிளைமொழிகளிலும் ஒத்துள்ளது. இரண்டாம் பட்டியலில் மீனவர் பேச்சில் உள்ள /த்/ அரிசனர் பேச்சில் உள்ள /ர், ற்/ என்ற ஒலியன்கட்கு இணையாக இருக்கிறது. அவ்வாறானால், ஒலியனியல் அட்டவணையில் உள்ள உருவம், எண்ணிக்கை ஆகிய ஒற்றுமையின் அடிப்படையில் அவை ஒத்த அமைப்பினைக் கொண்டவை எனக் கூறமுடியாது. எனவே ஒலியன்களைத் தனித்தனியே மட்டும் ஒப்பிடாமல், அவை வருமிடங்களையும் ஒப்பிட்டுக் காண்பதுடன், அவை சொல் நிலையில் வழங்கும் இயல்புகளையும் ஒப்பிடுதல் நல்லது. இருமை முறை இதனையே வற்புறுத்துகிறது.
உயிரொலியன்கள். ::{|
அ. /எ/ || ≈ ஏ ≈ அ ≈ ஆ
அ. /உ/ || ≈ ஊ
மெய்யொலியன்கள் ::{|
அ. / த் /
அ. / ச் / || ≈
::{|
அ. / ன் /
அ. /ள்/ || ≈
அ. /ர்/ || ≈ ல் ≈ ய்
இப்படத்தில் உள்ளவற்றை விரித்துக் கூறினால் ≈ இ ≈ என்பது இகரம் மீனவர் பேச்சில் எந்தெந்த சொற்களில் எந்தெந்த இடங்களில் வருகிறதோ, அதே சொற்களில் அதே இடங்களில் அரிசனர் பேச்சிலும் வரும். ::{|
அ. /எ/ || என்பது அரிசனர் பேச்சில் எகரம்
வருமிடங்களில் மீனவர் பேச்சில் எசுரம் அல்லது ஒலிப்புடைய ε வரும் என்பதைக் குறிக்கும். குறிக்கும். அதாவது மீனவர் பேச்சில் இரண்டு ஒலியன்கள் வருமிடங்களில் அரிசனர் பேச்சில் ஒரே ஒலியன் வருகிறது. இவைகளை முறையே ஒத்த இணைகள் (எ ≈ எ) மாறுபட்ட இணைகள் (எ≈ ε) எனலாம்.
:ஒத்த இணைகள்
கொவ்ழெ ராசாழி ஆழு || vtt|/ள்/ || தேளு கொவ்ளெ ராசாளி ஆளு
இங்கு எடுத்துக் காட்டிய சொற்களில் ஒலியன்கள் சொற்பொருளிலும் வடிவிலும் வருமிடங்களிலும் தனித்தனி ஒப்புமை பெற்றிருக்கின்றன. பழைய முறையில் ஒலியன் வடிவம் மட்டுமே ஒப்பிடப்பட்டது. ஆதலால் அது வருமிடத்தாலும் பிற ஒலியன்களுடன் கூட்டுச்சேரும் முறையாலும் வேறுபட்டு விளங்குவதைக் காட்டாததால் பழைய ஒப்பீட்டு முறை குறைபாடு உடையதாக இருந்தது. மீனவர் பேச்சிலும் அரிசனர் பேச்சிலும் ளகரமும் ழகரமும் உண்டு. ஆனால், இரு கிளைமொழிகளிலும் அவை ஒத்த இயல்புடையன என்று கூறமுடியாது. ஏனெனில் மீனவர் பேச்சில் ளகரம் இரட்டித்தே வரும். எடுத்துக்காட்டாக ‘வெள்ளி’, ‘பள்ளம்’ என்பன. ஆனால், தனித்து வருமிடங்களில்லை. அது இன்று ழகரமாக மாறிவிட்டது. இம்மாற்றம் அரிசனர் பேச்சில் நிகழவில்லை.
இருமை முறையில் ஒப்பிடும்பொழுது மட்டுமே இதனை அறிய முடிகிறது.
::{|
அ. / –ள்– / || = || மீ. /ள்ள்/ அ. /ள்ள்/ || / / ஆகும்
தனி ஒலியன்கள் மட்டுமேயன்றிக் கூட்டு ஒலியன்கள் அல்லது அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று ஒலியன்களையும் இம்முறையில் ஒப்பிடலாம். மொழியின் எந்த ஒரு கூற்றினையும் இம்முறையில் ஒப்பிடலாம். எனவே புற அமைப்பில் மொழிக்கூறுகள் வேறுபட்டனவாக இருந்தாலும் தொடர் அமைப்புப் பெற்றுள்ளன என்பது அமைப்புக் கிளைமொழியியலார் கருத்து. இதனடிப்படையில் மொழிக் கூறுகள் உறுதிப்படுத்தப்பட்ட செயல்களோடு வேறுபடுகின்றன. மொழியின் இரு நிலையில் குறைந்த அளவு ஒற்றுமை இலக்கண முறையாகவும், குறைந்த அளவு வேற்றுமை ஒலிநிலை அல்லது சொல் நிலை முறையாகவும் இருக்கிறது. எனவே மொழி வழக்குகளில் ஒற்றுமை வேற்றுமைகளைத் தெரிந்துகொள்ள உதவுவது அமைப்புக் கிளைமொழியியலே ஆகும்.கே.அ.
துணை நூல்கள்
William, G. Moulton., “Structural Dialectology”, Language, 1968.
Uriel Weinreich, “Is a Structural Dialectology Possible”, 1954.
Srioivasa Varma, G. “Kilaimoliyiyal”, Annamalai nagar, 1977.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 529)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qyunrrgz/
தமிழ்“அமைப்புக் கிளைமொழியியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qyunrrgz/APA
Oliyon Research. (2026). அமைப்புக் கிளைமொழியியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qyunrrgz/MLA
"அமைப்புக் கிளைமொழியியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qyunrrgz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment