சிவஞானபோதம்
civañāṉapōtam
பொருள்கள் · Senses
1.
1) பொருள் :சிவ அறிவு பற்றிய ஐயத்தை அகற்றுவது. அதாவது, சைவா கமங்கள் குறித்து எழும் ஐயங்களை நீக்கி, அவற்றைத் தெள்ளத் தெளிய உண்ர்த்துவது. 2) பாக்கள்:நூற்பாக்கள்12வெண் பாக்கள் 81. நூற்பாக்களிலுள்ள எழுத்துகள் 624 சொற்கள் 216 அதிகரணங்கள் 39. அரிய பெரிய சமய உண்மைகளை விளக்கும் இத்துணைச்சிறிய நூலை எம்மொழியிலும் காண்பது முயற்கொம்பே. திருமுறைகளில் பரக்கக் காணப்படும் உண்மைகளை நிரல்படுத்திச் சுருக்கமாகவும் செறிவாகவும் தெள்ளிதின் விளக்கிய பெருமை இந்நூலாசிரியர் மெய்கண்டாரையே சாரும். 3)அமைப்பு: பொது அதிகாரம், உண்மை அதிகாரம் என இரு அதிகாரங்களைக்கொண்டது. இந்நூல். ஒவ்வொரு அதிகாரமும் இரண்டு இயல்களைக் கொண்டது. ஒவ்வொரு இயலும் மூன்று நூற்பாக்களை கொண்டது. பொது அதிகாரம் பிரமாண இயல், இலக்கண இயல் என்னும் இரண்டையும் உண்மை அதிகாரம் சாதன இயல், பயனியல் என்னும் இரண்டையும் உடையது. ஒவ்வொரு இயலுக்கும் 3 நூற்பாக்கள் உண்டு. பொது அதிகாரம் 6 பாக்களையும் உண்மை அதிகாரம் 6 பாக்களையுங் கொண்டது. 4) நுவல்பொருள்: பொதுவாக, முப்பொருள்களாகிய பதி, பசு, பாசம் பற்றி உரைப்பது, சிறப்பாக நூற்பா. வரிசைப்படி உரைக்கப்படும் பொருளாவது, 1) காணப்பட்ட உலகத்தைக் கொண்டு காணப்படாத முதல்வனின் உண்மை நிறுவப்படுகிறது. இது வள்ளுவர் காட்டிய நெறி 2) இருவினை உண்மை பறைசாற்றப்படுகின்றது. 3) ஆன்மா உண்டு. 4) உயிர் இயல்பு கூறப்படுகிறது 5) அவ்வுயிர் முதல்வனால் அறியப்படுகின்றது. 6) முதல்வன் வாக்கு, மனம் முதலியவற்றால் அறியப்படாதவன், அருட்கண்ணினாலேயே அறியப்படுவன். 7) முதல்வனை அறிவித்தற்குரிய தகுதி உயிருக்கே உண்டு. 8) முதல்வனே குருவாக வந்து உயிருக்குத் தன்னை உணரும் திறத்தை உணர்த்துவான். 9) அருளுரைப் பொருளை உன்னும் நெறி உணர்த்தப்படுகிறது. 10) திருவருள் வழி நின்றால், வினையும் வினையால் வரும் துன்பமும் நீங்கும் 11) முதல்வனிடத்து அன்புசெலுத்தினால், வீடுபேறு எய்தலாம். 12)இறையறிவு எய்திய போதும், இன்றியமையாதவை அடியார் வழிபாடும் ஆலய வழிபாடுமாகும். - உணர்தல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல், ஒன்றி ஒழுகுதல் என்னும் நான்கு வகை நெறிகளால் உணரல். இருப்பினும், குரு மூலம் பயிலுதலே நன்று.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qvq9ddd2/
தமிழ்“சிவஞானபோதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qvq9ddd2/APA
Oliyon Research. (2026). சிவஞானபோதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qvq9ddd2/MLA
"சிவஞானபோதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qvq9ddd2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment