இராமநாதன் செட்டியார்
irāmanātaṉ ceṭṭiyār
இராமநாதபுரம் மாவட்டத்தில் நகரத்தார் வகுப்பில் தோன்றிய தமிழ் அறிஞருள் ஒருவராவார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நகரத்தார் வகுப்பில் தோன்றிய தமிழ் அறிஞருள் ஒருவராவார். கி.பி. 1899–ஆம் ஆண்டில் பிறந்த இவர், தம் கல்விப் பயிற்சிக்குப் பின்னர், மலேசியா சென்று சிலகாலம் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். சைவ சமய நாட்டமும் புலமையும் கொண்ட இவர், அரசியலை விட்டுச் சமயப் பணியில் ஈடுபடலானார். இவர் இலங்கை, பிலிப்பைன்சு, கம்போடியா, தாய்லாந்து முதலிய நாடுகளுக்குச் சென்று அங்கெல்லாம் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றினார். பிலிப்பைன்சு நாட்டில் 1964–இல் நடைபெற்ற கிறித்தவ இளைஞர் மாநாட்டில் இந்து சமயச் சார்பாளராகக் கலந்துகொண்டார். சைவத்தின் சிறப்பு, ஏன் பிறந்தோம், வாழ்க்கையும் சமயமும், ஆழமும் அகலமும், ஞானச்செய்தி பார்ப்பது எது, மலேயா–இந்தியாப் பயணம், வேலன் விளையாட்டு ஆகிய பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். இவர் தம் 67–ஆம் ஆண்டில் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 125)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qtt89uu3/
தமிழ்“இராமநாதன் செட்டியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qtt89uu3/APA
Oliyon Research. (2026). இராமநாதன் செட்டியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qtt89uu3/MLA
"இராமநாதன் செட்டியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qtt89uu3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment