இருபத்தேழு நாண் மீன்களுள் இருபத்தொன்றாவது ஆகும். இது நான்கு மீன்களால் சதுர வடிவில் அமைந்துள்ளது. இது தனுசு இராசியில் முதல் பாதமும் மகர இராசியில் மூன்று பாதமும் பெற்றுள்ளது. இது தனுசு இராசியில் 26 பாகை 40 கலை முதலாகக் கன்னி இராசியில் முதல் 10 பாகை வரை இடம்பெற்றுள்ளது. உத்திராடத்திற்குக் குளம், கூவல், விச்சுவ நாள், ஆனி, ஆடி ஆகிய பெயர்கள் உண்டு. உத்திராடம் தலையற்ற நாண் மீன்களுள் ஒன்றாகும். இந்த நாளில் நற்செயல்கள் தவிர்க்கப்படும். சந்திரன் உத்திராடத்தில் இருக்கும் போது பிறந்த ஒருவர் உத்திராடத்திற்குரிய கோளாகிய சூரியன் திசையில் பிறந்தவர் ஆவார். உத்திராடம் குருவுக்குரிய தனுசு வீட்டிலும் சனிக்குரிய மகரவீட்டிலும் அமைகிறது. ப.ரா.க.