அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை
akila amerikka aikkiyak koḷkai
(Pan-Americanism) : அமெரிக்காக் கண்டம், வட பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாடுகளும், மத்தியப் பகுதியில் மெக்சிகோவும், தெற்குப் பகுதியில் லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஆகப் பல நாடுகள் சேர்ந்த ஒரு பெரு நிலப்பரப்பு.
(Pan-Americanism) : அமெரிக்காக் கண்டம், வட பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாடுகளும், மத்தியப் பகுதியில் மெக்சிகோவும், தெற்குப் பகுதியில் லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஆகப் பல நாடுகள் சேர்ந்த ஒரு பெரு நிலப்பரப்பு. இந் நாடுகளெல்லாம் பலவகைக் கொள்கை வேறுபாடுகள் உள்ளவை. ஆயினும் இக்கண்டத்து அரசாங்கங்கள் தங்களுக்குள் ஒற்றுமைப் பட்டால் எல்லாருடைய நலத்திற்கும் அது உகந்ததாகும் என்று கருதின. 1889-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் முக்கியமாக வாணிப நலன்களையே நோக்கமாகக் கொண்டு ஐக்கிய முயற்சியில் ஈடுபட்ட்ன. ஆயினும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு அமரிக்க ஐக்கிய நாடுகளிடம் நம்பிக்கை யில்லாம்லிருந்ததால் இம் முயற்சி அதிகமாகக் கைகூடவில்லை . 1823-ல் மன்ரோ தோற்றுவித்த கொள்கை அமெரிக்காக் கண்டத்தில் பிறர் தலையீட்டைக் கண்டித்ததாயினும் 1904-ல் தியடோர் ரூஸ்வெல்ட் இக்கொள்கையிற் செய்த் திருத்ததால் கரீபியன் கடல் தகராறில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தலையிட முடிந்தது. இதனால் அமெரிக்க ஐக்கிய நாடுகலிடம் தென் அமெரிக்கப் பகையுணர்ச்சி வளர்ந்தது. 1928லிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்ற அமெரிக்க நாடுகளிடம் நட்பு முறையில் நடந்து கொள்ளத் தொடங்கின. அப்போதிலிருந்து அகில அமெரிக்காவும் ஒன்றுபட்டு வெளிநாட்டு விவகாரங்களை நடத்த வேண்டும் என்பது ஒரு கொள்கையாயிற்று. இக் கொள்கையை நடைமுறையில் கொண்டுவர வாஷிங்டன், மெக்சிகோ நகரம், ரீயோடிஐனெரோ, போனஸ் அயர்ஸ், சான்டியாகோ, ஹவானா, மான்டி, விடியோ முதலிய இடங்களில் பல மாநாடுகள் நடைபெற்றன. இம்மாநாடுகளைத் தொடர்புபடுத்திக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயல்வது அகில அமெரிக்க ஐக்கியம் என்னும் ஸ்தாபனம். இதன் தலைமைக் காரியாலயம் வாஷிங்டனில் உள்ளது.
அமெரிக்க நாடுகளிடையே எற்படும் விவகாரங்களைச் சமாதானமாகத் தீர்ப்பதும், பொருளாதார, பண்பாட்டு, சமூக ஒற்றுமையை வளர்ப்பதும் இவ் வைக்கியத்தின் நோக்கங்கள். 1936 போனஸ் அயர்ஸில் நடந்த மாநாடு வெளியார் ஆக்கிரமிப்பிலிருந்து அமெரிக்க நாடுகளைக் காக்க அந்நாடுகளிடையே ஒற்றுமை வேண்டும் என்று வற்புறுத்திற்று. 1947-ல் ரீயோடி, ஜனேரொ பரஸ்பர உதவி யொப்பந்தமும் இதையே சுட்டிற்று.
20-க்கு மேற்பட்ட பல்வேறு நாடுகளிடையே மன ஒற்றுமை காண்டல் அரிது, அன்றியும் மேற்கு அர்த்த கோளம் உலகத்தின் பிற பகுதிகளின்றும் தனிப்பட்டு நிற்றலும் அரிது. ஆயினும் ஐ.நா. சபையில் ஐக்கிய நாடுகளும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஒத்துழைத்து வருவதைக் காணில் இவ்வொற்றுமை இயலும் என்றே தோன்றும். அ. மு]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 57)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qng5858q/
தமிழ்“அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qng5858q/APA
Oliyon Research. (2026). அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qng5858q/MLA
"அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qng5858q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment