இது கருவி ஒலியியலில் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கருவி ஒலிப்பான், ஒலிப்பு முறை ஆகியவைகளுக்கிடையே ஏற்படும் தொடர்பினைத் துல்லியமாக அறிவியல் அடிப்படையில் அறிந்து கொள்ளப் பெரிதும் பயன்படுகிறது. குறிப்பாக நாக்கு, வல்லண்ணம் ஆகிய இரண்டிற்கும் இடையே உச்சரிப்பின் போது ஏற்படும் உறவை ஆய்வு செய்வதற்கு இது பயன்படுகிறது. இவ்வாய்வு இரு முறைகளாகச் செயல்படுத்தப்படுகிறது. ஒன்று, சுரியும் சாக்லேட்டும் கலந்த ஒரு கலவையை நேரடியாக நாக்கு அல்லது அண்ணத்தில் பூசுவது, இது இயற்கை முறை அல்லது நேரடி முறை எனப்படும். இரண்டு, செயற்கையாகச் செய்யப்பட்ட ஓர் அண்ணத்தினை வல்லண்ணத்தோடு ஒட்ட வைத்து, அதில் தொடர்பினைப் பதிய வைப்பது. இது செயற்கை அல்லது சுற்று முறை எனப்படும். இம்முறைகளின் வழியே நாக்கிற்கும் அண்ணத்திற்கும் இடையே ஏற்படும் உறவு தெளிவாகப் பதிவு செய்யப்பட முடியும். அதன் விளைவாக நமக்குக் கிட்டுகின்ற படமே அண்ண ஒலிப்படக் கருவி (Palatography) ஆகும். பற்களின் அடிப்படையில் அண்ணத்- தைக் கீழ்க்கண்ட பகுதிகளாகப் பிரித்து ஒலிப்படத்தைப் புரிந்து கொள்வது எளிது. அண்ண ஒலிப்படம் ‘Very’ என்ற ஆங்கிலச் சொல்லை உச்சரிக்கும்போது எடுக்கப்பட்ட அண்ண ஒலிப்படம்: இவ்வொலிப் படங்கள் இதழ் ஒலி, கடையண்ண ஒலி அல்லாத ஏனைய ஒலிகளுக்கான உச்சரிப்பு முறைகளை மட்டுமே புரிந்து கொள்வதற்குப் பயன்படுகின்றன. இதழ் ஒலி, கடை அண்ண ஒலி ஆகியவற்றின் உச்சரிப்பு முறையைப் புரிந்து கொள்வதற்கு இக்கருவி பயன்படாது.தா.வ. துணை நூலகள் Firth, J.R., “Improved techniques in Palatography and Kymography”, (Linguistics 1934–1951), Oxford, 1957. “Word Palatograms and Articulation”, in (Linguistics 1934-1951), Oxford, 1957. Strenger, F., Radiographic Palatographic and Labiographic methods in Phonetics, in Malmberg, B.(Ed.) Manual of Phonetics Amsterdam, 1968.