அராபியப் பாலை நிலம்
arāpiyap pālai nilam
அராபியா முந்நீரகத்திலுள்ள (Peninsula) பாலைநிலங்கள் அனைத்தையும் குறிக்கும் தொடர்.
அராபியா முந்நீரகத்திலுள்ள (Peninsula) பாலைநிலங்கள் அனைத்தையும் குறிக்கும் தொடர். 13,00,000 ச.கி.மீ. பரப்பைக் கொண்ட அராபியப் பாலைநிலத்தில் அல்சாபுரா, அல்லப்பா, அன் நாபுத் (An Nafud), அசுசும்மன், இர்க்கசு சுபாய், நாபுத் சுத்தகி, இரப் அல் கலி (Rub al kali), சிரியா போன்ற பகுதிகள் அடங்கும். இவை அரேபியாவில் உள்ளன.
நைல் ஆற்றுக்கும் செங்கடலுக்கும் இடையேயுள்ள பாலை நிலத்தையும் அராபியப் பாலை நிலம் என்றே கூறுவர். இது எகிப்தில் உள்ளது. இப்பாலை நிலம் சகாராவின் ஒரு பகுதியாகும். இதனைக் கிழக்கத்தியப் பாலைவனம் என்பர். வடக்கே மத்திய தரைக்கடலும், தெற்கில் சூடானும் இதன் எல்லைகளாம். இப்பாலை நிலம் 1,45,000 ச.கி.மீ. பரப்பினைக் கொண்டுள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 766)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qmr94swr/
தமிழ்“அராபியப் பாலை நிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qmr94swr/APA
Oliyon Research. (2026). அராபியப் பாலை நிலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qmr94swr/MLA
"அராபியப் பாலை நிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qmr94swr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment