பண்டைய கிரீசு நாட்டின் பெலபோனீசசு (Peloponnesus) நகரின் வடகரைப்பகுதி- யாகும். அக்கேயா (Achaea) பன்னிரண்டு நகரங்கள் இணைந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் அக்கேயக் கூட்டாக (Achaean League) உருவாயிற்று. இக்கூட்டு கி.மு. மூன்று, இரண்டு ஆகிய நூற்றாண்டுகளில் புகழ் பெற்று விளங்கியது. ஓமர் (Homer) என்னும் கிரேக்கக் கவிஞர் அக்கேயா என்ற சொல்லைத் தாம் இயற்றிய ‘இலியாது’ (Iliad) என்ற காப்பியத்தில் ஆண்டுள்ளார்.