வட்டு

vaṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வட்ட வடிவில் இருக்கும் பொருள்
வட்டு எறிதல் (Discus Throw) என்பதொரு தட கள விளையாட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டு)
2.
வட்டல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டு)
3.
சூது, திரட்சி, சூதாடு கருவி, எஃகுருண்டை, ஒரு வகைச்செடி, சிறு ஆடை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 362)
4.
வட்டினைக் குறிக்க Disc, Disk ஆகிய இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. லேசர் ஒளிக்கதிர் மூலம் எழுத/படிக்க முடிகிற, காந்தத் தன்மையற்ற உலோகப் பூச்சுள்ள பிளாஸ்டிக் வட்டுகள் Disc என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. அவையல்லாத ஏனைய வட்டுகள், நெகிழ் வட்டு, நிலை வட்டு, ரேம் வட்டு (நினைவகத்தில் உருவாக்கப்படும் மெய்நிகர் வட்டு) ஆகியவை Disk என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. லேசர் வட்டு, குறுவட்டு, கேட்பொலி/ஒளிக்காட்சி வட்டு, டிவிடி வட்டு ஆகியவை பெரும்பாலும் Disc என்று குறிக்கப்படுகின்றன. — disc
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 453)
5.
கணினியால் அணுகக்கூடிய தகவல் மற்றும் நிரலாக்கத் தொடர்களை சேமிக்கும் மின்காந்த சாதனம். நிலைத்த வட்டு அல்லது வளையக்கூடிய செயற்கை இழை வட்டுகளின் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன — disk
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மின்காந்தத் தட்டு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 454)
6.
உருளும் வட்டத் தட்டு. தகவல்கலைச் சேமிக்கக் காந்த மேற்பரப்புண்டு — Disk -A rotating circular plate having a magnetizable surface to store data
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 75)
7.
தாள்நாடாக்களுள் உருளும் அமைப்பு — Spool
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 203)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q8ch3rbg/

தமிழ்
“வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q8ch3rbg/
APA
Oliyon Research. (2026). வட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q8ch3rbg/
MLA
"வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q8ch3rbg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment