அய உட்புரி
aya uṭpuri
பொருள்கள் · Senses
1.
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் போன்று ஒரு வளையத்திற்கும் வலஞ்சுழியாக அல்லது இடஞ்சுழியாகக் காந்த மேற்றலாம். இது ஈரிலக்க '0'-களையும் 1 - களையும் சேமித்து வைக்க உதவுகிறது. ஒரு கணினியின் உள்மையச் சேமிப்பியை உருவாக்குவதற்கு இத்தகைய உட்புரிகள் அமைக்கப்படுகின்றன. ferric oxide (Fe2 O3) : அய ஆக்சைடு (Fe2 O3) : மின்காந்த வட்டுகளிலும் நாடாக்களிலுமுள்ள பூச்சுகளில் பயன்படுத்தப்படும் இரும்பின் ஆக்சி கரணி. ferromagnetic : அயக்காந்தம் : அயம், நிக்கல் போன்ற ஒரு பொருள். மிக உயர்ந்த காந்த மேற்பரப்புத் திறன். ferromagnetic material இரும்புக் காந்த ஆக்கப் பொருள் : நேர்காந்த ஆக்கப் பொருள் : மிகுகாந்தப் பண்பு பெறக்கூடிய பொருள். மின்னணுத் துறையில் பரவலாகப் பயன்படுத்தக்கூடிய பொருள். எஃகு மற்றும் தூளாக்கப்பட்ட இரும்பு ஆகியவை. மின்தூண்டி (Inductor) களின், தூண்டல் திறனை அதிகரிக்க, அவற்றின் சுருள் மையமாய்ப் பயன்படுகிறது. நெகிழ்வட்டு, நிலைவட்டு மட்டும் காந்த நாடாக்களில் மேல்பூச்சுக்குப் பயன்படுகிறது. ferrous oxide ஃபெர்ரஸ் ஆக்சைடு : பதிவு செய்யும் வட்டுகள் மற்றும் நாடாக்களுக்கு பூசும் பொருள். இதை மின்காந்தப்படுத்த முடிவதால், மின்காந்த முறையில் தரவுப் பதிவு செய்ய முடிகிறது. fetch : கொண்டு வா, கொணர், எடு : ஒரு சேமிப்பகத்திலிருந்து நிரல் அல்லது தரவுகளைக் கண்டுபிடித்து ஏற்றுதல். fetcher daemon : நேர்த்திச் செயல்முறை : முதன்மைச் செயல் முறையிலிருந்து வேண்டு கோள்களைக் கேட்டறிந்து, பிறகு முதன்மைச் செயல்முறையின் சார்பாக ஒரு வேண்டுகோளை விடுக்கிற ஒரு பெரிய செயல்முறையின் பகுதியாக இருக்கிற ஒரு சிறிய செயல்முறை. இந்தச் செயல்முறைகள் சிறிதாக இருப்பதால் இவற்றை மிகநேர்த்தியாகத் தனிப்பண்புடையதாக்கி, மிகத் திறம் படச் செயல்புரியும்படி செய்யலாம். FF : எஃப்எஃப் : Form Feed என்பதன் குறும்பெயர். . fi : எஃப்ஐ : இணையத்தில் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த இணையதளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர். fiber channel : ஒளியிழைத்தடம் : அதி வேகமாகச் செயற்படும் கணினிக்காக உருவாக்கப்பட்டு வரும் எதிர்கால ANSI செந்தரம் (தர அளவு). இதில், IPI, SCSI. HIPPI நிரல் தொகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் வேகம் வினாடிக்கு 12. 5 முதல் 100 MBytes வரை இருக்கும். fiber - optic cable : ஒளியிழைத் தொகுப்பு : பெருமளவுத் தரவுகளை ஒளியின் வேகத்தில் கொண்டு செல்லக்கூடிய, நுண்ணிய கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் இழைகளினாலான தரவு அனுப்பீட்டு ஊடகம். fiber optics : ஒளி இழைகள் : ஒளியின் வேகத்தில் அதிக எண்ணிக்கைகளில் தரவுகளை அனுப்பக்கூடிய கண்ணாடி அல்லது செயற்கை நுண் இழைகளின் ஊடக தரவு அனுப்பல் முறை. fibonacci numbers : ஃ பைபோன் ACCI எண்கள் : முந்திய இரு எண்களின் கூட்டுத்தொகையாக (1, 1, 2, 3, 5, 8, 13 என்று இருக்கும் வகையில்) ஒவ்வொரு எண்ணும் இருக்கிற முழுஎண்களின் வரிசை. தேடுதலை இரு கீழின எண்களாகப் பகுக்கிற ஈரிலக்கத் தேடுதல்களை இது விரைவுபடுத்துகிறது. fibonacci search : ஃபைபோன் ACCI தேடுதல் ; ஃபைபோன் ACCI எண்களைப் பயன்படுத்தும் ஒரு தேடுதல் படிநிலை வரிசை. இது ஈரிலக்கத் தேடுதலில் இரண்டின் வர்க்கங்களைப் பயன்படுத்துவது போன்றதாகும். fiche : படத்தாள்; நுண்படத்தாள் : பல்வகை நுண் தோற்றங்களை உள்ளடக்கிய ஒளிப்படத் தாள். fidoNet : ஃபைடோனெட் : டாம் ஜென்னிங்ஸ் என்பவர் 1984இல் உருவாக்கிய ஃபைடோ BBS என்பதிலிருந்து தோன்றிய மின்னணுவியல் அஞ்சல் மரபுத் தொகுதி. 10, 000-க்கும் அதிகமான ஃபைடோனெட் மையமுனைகள் பயன்பாட்டில் உள்ளன. field புலம் : தரவுத் தள மேலாண்மை அமைப்பு கையாளும் மிகச்சிறிய அலகாகிய தரவுவின் ஒரு துண்டு. பணியாளர் கோப்பில், ஒரு நபரின் பெயர், வயது ஆகிய இரண்டும் இரண்டு தனித்தனி புலங்களாகக் கருதப்படும். ஒன்று அல்லது மேற்பட்ட புலங்களைக் கொண்டதே பதிவேடு. Fjeld Alterable Control Element (FACE) : புலம் மாற்றக்கூடிய கட்டுப்பாட்டு அலகு : பயனாளர் நுண் நிரலாக்கத் தொடர் எழுத வழிவகுக்கும் சில அமைப்புகளில் உள்ள சிப்பு. field data : புல தரவுக் குறியீடு : மாறுபடும் உற்பத்தியாளர் குறி யீடுகளுக்கு இடைப்பட்ட ஏற்பாடாக அமெரிக்க இராணுவம் தரவு செயல்பாடுகளில் பயன்படுத்தும் சரிசெய் குறியீடு. field effect transistor (FET) : புல விளைவி மின்மப் பெருக்கி : மாறிலி சக்தியேற்கும் சேமிப்புப் பொருளாகச் செயல்படும் இறுதிப்பகுதி அரைக்கடத்திச் சாதனம். field emmission : புல அனுப்புதல்; புல வீச்சு, புல உமிழ்வு : வலுவான மின்சாரப் புலத்தின் தாக்கத்தினால் ஒரு உலோகம் அல்லது அரைக் கடத்தியிலிருந்து எலெக்ட்ரான்களை வெற்றிடத்திற்கு அனுப்புதல். field engineer : களப் பொறியாளர் : கணினி வன்பொருள் மற்றும் மென்பொருளின் களப் பராமரிப்புக்குப் பொறுப்பேற்றுள்ள தனிநபர். வாடிக்கையாளரின் பராமரிப்பு பொறியாளர் என்றும் அழைக்கப்படுவார். field name : புலப்பெயர் : ஒரு புலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பெயர். (பெயர், முகவரி, நகரம், மாநிலம் முதலியன). இது எல்லாப் பதிவேடுகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும். இது புலத்தை அடையாளங்காட்டக் கூடியதேயன்றி, அதில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுவை அடையாளங்காட்டக் கூடியதன்று. field of view : புலப்பார்வை ; காட்சிப் புலம் : கணினி வரை கலைகளில், உருவாக்கப்பட்ட ஒளிப்படக் கருவி பார்க்கும் திறனின் எல்லைகளைக் குறிப்பிடுகிறது. ஒளிப்படக் கருவியை மையமாகக் கொண்ட கிடைமட்டக் கோணத்தையே இது பெரும்பாலும் குறிப்பிடுகிறது. கணிப்புக்கு எளிமையாக்க, கணினி வரைகலையாளர்களின் அனுமானத்தின்படி, ஒளிப் படக்கருவி ஒரு பிரமிட்டிற்குள் உள்ளது; கூம்புக்குள் அல்ல. field programmable logic array : புல நிரலாக்க தருக்கக் கோவை : ஒரு வகையான ஒருங்கிணை மின்சுற்று (IC). இதில் தருக்க மின்சுற்றுகளின் (logic circuits) கோவை இருக்கும். தனித்த மின்சுற்றுகளிடையே இணைப்புகளையும், அதன்மூலமாக கோவையின் தருக்கச் செயல்முறைகளையும் நம் விருப்பப்படி நிரலாக்கம் செய்யமுடியும், தயாரிப்புக்குப் பிறகு, குறிப்பாக அவற்றைக் கணினிகளில் நிறுவும் நேரத்தில் நிரலாக்கம் செய்யலாம். இத்தகைய நிரலாக்கத்தை ஒரேயொருமுறை மட்டும் செய்யமுடியும். சிப்புவின் இணைப்புகளிடையே மிக அதிக மின்சாரத்தை செலுத்தி இத்தகைய நிரலாக்கத்தைச் செய்வர். field separator : புலப்பிரிப்பி : ஒரு பதிவேட்டில் புலங்களைப் பிரித்துக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடு காற்புள்ளி, அரைப்புள்ளி அல்லது முக்காற்புள்ளியாக இருக்கலாம். field squeeze : புலப் பிழிவுக் கருவி : ஒர் அஞ்சல் இணைப்பியில், ஒரு தரவு புலத்தில் கூடுதலான காலியிடங்களை அகற்றி, எழுத்து வாசகத்தினுள் துல்லியமாக அச்சிடும்படி செய்யும் ஒரு செயற்பணி. field upgradable : களத்தில் மேம்படுத்தக்கூடிய வன்பொருள் : வழங்கப்பட்ட பிறகு கணினி கிடங்கிலோ அல்லது பழுது பார்க்கும் மையத்திலோ அல்லது ஒருவரது அலுவலகத்திலோ, இத்தகைய களத்தில் மேம்படுத்தக் கூடியது. FΙFΟ : எஃப்ஐ எஃப்ஓ ; First in First Out என்பதன் சுருக்கம். ஒரு பட்டியலில் பொருள்களைச் சேமிக்கவும் திரும்பப் பெறவுமான முறை. காத்திருப்போர் வரிசையில் (கியூவில்) முதலில் வந்தவர் முதலில் கவனிக்கப்பட்டு அனுப்பப்படுவார். fifth generation computers : ஐந்தாம் தலைமுறைக் கணினிகள் : அடுத்த கணினி வளர்ச்சி நிலை, ஒலி உள்ளீடு/வெளியீடு செயற்கை நுண்ணறிவு, காரண காரியமறிந்து, பகுத்தறிந்து, முடிவெடுக்கக்கூடிய எந்திரங்களை உருவாக்கும் தொழில் நுட்பம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. figure shift : எண் மாற்றம் : விசைப் பலகையின் ஒரு விசை அல்லது விசை உருவாக்கும் குறியீடு, செய்தியில் மாற்று வரும் வரை அடுத்து வரும் எழுத்துகளை எண்களாகக் கருத வேண்டும் என்பதை உணர்த்துகிறது. file : கோப்பு : தரவுத் தொகுப்பு : ஒரு அடிப்படை சேமிப்பு அலகாகக் கருதப்படும், தொடர்புடைய பதிவுகளின் தொகுதி. file access time : கோப்பு அணுகல் நேரம் : ஒரு கோப்பினைத் திறந்து தரவுவைப் படிக்கத் தொடங்குவதற்கு கணினி எடுத்துக் கொள்ளும் நேரம். File Allocation Table (FAT) : கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை : ஒரு வட்டிலுள்ள தரவுகளின் பதிவேடு. இதன் மூலம் ஒவ்வொரு கோப்பின் உள்ளடக்கங்களையும் அணுகலாம். ஒரு செருகு வட்டில் அல்லது நிலைவட்டில் உள்ள ஒரு தரவுக் கோப்பு, அதில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கோப்பின் அமைவிடம் பற்றிய தரவுகளைக் கொண்டிருக்கும். இது, ஒவ்வொரு கோப்பினையும் தேவைப்படும்போது கண்டறிந்து படிப்பதற்கு உதவுகிறது. இந்த அட்டவணை பெரும்பாலும் இருமடியாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். file and record locking : கோப்பு மற்றும் பதிவேட்டுப் பூட்டு : பயனாளர் பன்முகச் சூழலில் தரவு மேலாண்மை செய்வதற்கான உத்திகள். தரவு, வாசகம், அல்லது உருக்காட்சிக் கோப்பினை ஒருவர் அணுகுவதை இந்தக் கோப்புப் பூட்டு தடுக்கிறது. ஒரு தரவுக் கோப்பினுள் தனியொரு பதிவேட்டினை அணுகுவதைப் பதிவேட்டுப் பூட்டு தடுக்கிறது. file attribute : கோப்புப் பண்பியல்பு : ஒரு DOS கோப்பின் பண்பியல்புகள் தொடர்பான தரவுகள். எடுத்துக்காட்டாக, அது மறைந்துள்ளதா, படிப்பதற்கு மட்டுமேயானதா, எழுதுவதற்கு மட்டுமேயானதா என்ற விவரங்கள். ஒரு கோப்பினைப் பாதுகாப்பாகக் கையாள்வதற்கு அனுமதிக்கிற கோப்பு அணுகு வகைப்பாடு. முக்கிய பண்பியல்புகள்;எழுதப் படிப்பதற்குரியது; படிப்பதற்கு மட்டுமே உரியது; மறைவானது. file backup : கோப்பு மாற்று ஏற்பாடு; மாற்றுக் கோப்புப்படி : கோப்புக் காப்பு : அழிக்கப்பட்ட அல்லது சேதமாக்கப்பட்ட தரவுத் தளம் ஒன்றை மீண்டும் கொண்டு வரப் பயன்படுத்தப்படும் தரவுக் கோப்புகளின் படிகள். file codes : கோப்புக் குறி முறைகள் . file compression : கோப்புச் சுருக்கம் : கோப்பு அழுத்தம்;
— ferric core
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q44sg98b/
தமிழ்“அய உட்புரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q44sg98b/APA
Oliyon Research. (2026). அய உட்புரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q44sg98b/MLA
"அய உட்புரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q44sg98b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment