கோப்புப் பேணுகை

kōppup pēṇukai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்தல். வட்டு இயக்கிகளைக் காலாந்திரங்களில் சீரமைவு செய்தல். filename : கோப்புப் பெயர் : ஒரு குறிப்பிட்ட கோப்பை அடையாளம் காண உதவும் அகர வரிசை எண் முறை எழுத்துகள். file name extension : கோப்புப் பெயர் விரிவாக்கம்; கோப்புப் பெயர் நீட்டம்; கோப்புத் துணைப் பெயர்; கோப்பு இனப் பெயர் : ஒரு கோப்புப் பெயரின் இரண்டாவது பகுதியாக அமையும் குறியீடு. ஒரு புள்ளியின் மூலம் கோப்பின் பெயரில் இருந்து பிரிக்கப்படுகிறது. கோப்பில் எத்தகைய தரவுகள் உள்ளன என்பதைக் குறிப்பிடுகிறது. file open : கோப்புத் திறப்பு. file organization : கோப்பு ஒருங்கமைத்தல்; கோப்பு அமைத்தல்; கோப்புத் தொகுப்பு : பயன்பாட்டு நிரலாக்கத் தொடர் அமைப்பவர் தரவுகளைப் பார்க்கும் முறை. file pointer : கோப்புச் சுட்டு : DOS திறக்கிற கோப்பு ஒவ்வொன்றுக்கும் அது வைத்து வருகிற ஒரு மாறியல் மதிப்புரு. இந்தக் கோப்புச் சுட்டு, கோப்பில் படிப்பு/எழுத்து செயற்பாடு தொடங்குகிற அமைவிடத்தைச் சுட்டிக்காட்டுகிறது. file processing : கோப்புச் செயல்பாடு; கோப்பு அலசல் : அடிப்படைக் கோப்புகளில் நடப்புத் தரவுகளின் மாற்றங்களுக்கேற்ப காலமுறைப்படி புதுப்பித்தல். அடிப்படை இருப்பு எடுப்புக் கோப்பில் மாதாந்திர இருப்பு எடுப்புக்கோப்பிலிருந்து மாற்றம் செய்தல் போன்ற பரிமாற்ற தரவுகளைக் கொண்டதாக இவை அமைந்திருக்கும். File Maintenence-க்கு எதிர்ச்சொல். file protection : கோப்புக் காப்பு; கோப்புப் பாதுகாப்பு : ஒரு கோப்பிலிருந்து எதிர்பாராத விதமாக தரவு அழிக்கப்படுவதைத் தடுக்கும் சாதனம் அல்லது தொழில்நுட்பம். மின் காந்த நாடா கோப்பு பராமரிப்பு வளையம் அல்லது செருகு வட்டினைப் பாதுகாக்க அதன் மேல் ஒட்டப்படும் பகுதி. file - protect ring : கோப்புப் பாதுகாப்பு வளையம் : மின்காந்த நாடாவில் உள்ள தகவல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் சாதனம். நாடா சுருணையிலிருந்து வளையத்தை நீக்குவதன் மூலம் நாடாவின் மீது தவறுதலாக எழுதுவது தவிர்க்கப்படுகிறது. write protect-க்கு இணைச் சொல். file recovery : கோப்பு மீட்பு : இழந்துபோன அல்லது படிக்க முடியாத வட்டுக் கோப்புகளை மீட்டெடுக்கும் செயல்முறை. பல்வேறு காரணங்களினால் கோப்புகள் தொலைந்து போகலாம். கவனக்குறைவாக அழித்துவிடல், கோப்பு பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு பாதிப்பு ஏற்படல், வட்டு பழுதடைதல் போன்ற காரணங்களினால் நாம் கோப்புகளை இழக்க நேரிடுகிறது. ஒரு கோப்பினை அழிக்கும்போது அதன் விவரங்கள் அழிக்கப்படுவதில்லை. அந்த இடம் பிற கோப்புகளுக்குக் கிடைக்கும். கோப்பு விவரங்கள் எழுதப்பட்ட இருப்பிடங்களை அடையாளம் காணமுடிந்தால் ஒட்டு மொத்தக் கோப்பையும் மீட்டுவிட முடியும். பழுதான கோப்புகளைப் பொறுத்தமட்டில், வட்டில் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் விவரத்தைப் படித்து வேறொரு வட்டில் அல்லது கோப்பில் ஆஸ்கி (ASCI) அல்லது இரும/பதினறும எண்ணுருவில் எழுதிக்கொள்ளும் நிரல்கள் உள்ளன. எனினும் இந்த முறையில் மூலத்தகவலை அப்படியே பெறுவது இயலாது. இழந்த கோப்புகளை மீட்பதற்குச் சிறந்த வழிமுறை அவற்றை காப்பு நகலிலிருந்து (Backup) பெற்றுக் கொள்வதேயாகும். file recovery programme : . கோப்பு மீட்புச் செயல்முறை : தற்செயலாக நீக்கப்பட்டு அல்லது சேதமடைந்துவிட்ட வட்டுக்கோப்புகளை மீட்பதற்கான மென்பொருள். file retrieval : கோப்பு கொணர்தல் : ஒரு தரவுக் கோப்பினை, சேமித்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து அதனைப் பயன்படுத்தவிருக்கும் கணினிக்குக் கொணரும் நடவடிக்கை. file server : கோப்புப் பரிமாறி; கோப்பு வழங்கி : ஒரு வளாகக் கணினிக் கட்டமைப்பிலுள்ள தலைமைக் கணினி. இது, இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொறியமைவுகளும் அணுகக் கூடிய கோப்புகள் அனைத்தின் சேமிப்புத் தொகுதியாகும். file sharing : கோப்புப் பகிர்வு : பிணையங்களில் மையக் கணினி அல்லது வழங்கன் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட கோப்பினைப் பல்வேறு பயனாளர்களும் ஒரே நேரத்தில் பார்வையிட, திருத்த, வசதி இருக்க வேண்டும். இவ்வாறு ஒரே நேரத்தில் ஒரு கோப்பினை பலர் கையாள்வது கோப்புப் பகிர்வு எனப்படுகிறது. ஒரே நேரத்தில் வேறு வேறு நிரல்கள் அல்லது வேறு வேறு கணினிகள் பயன்படுத்துகின்றன எனில் கோப்பு விவரங்கள் அதற்கேற்ற வடிவாக்கங்களில் மாற்றப்பட்டு அளிக்கப்பட வேண்டும். ஒரு கோப்பு, பலராலும் கையாளப்படுகிறதெனில் அக்கோப்பினை அணுகுவது, நுழை சொல் (Password) பாதுகாப்பு மூலம் ஒழுங்குப்படுத்தப்படவேண்டும். ஒரே நேரத்தில் ஒரு கோப்பினை ஒன்றுக்கு மேற்பட்டோர் திருத்த முடியாதவாறு கோப்புப் பூட்டு முறை (Fle lock) இருக்க வேண்டும். இணையத்தில் நிலையங்களிடையே கோப்பு வேண்டுகோள்களுக்கு (திற, படி, எழுது, மூடு முதலியன) ஒரு கட்டமைவை அளிக்கிற செய்தித் தொடர்பு மரபு முறை. இது OSI உருமாதிரியின் படுகை-7 - ஐக் குறிக்கிறது. file size : கோப்பு அளவு : ஒரு கோப்பில் உள்ள தரவுகளின் அளவை 'பைட்டு' எண்ணிக்கையில் குறிப்பிடுவது. மீதுள்ள ஒரு கோப்பின் அமைவிடத்தைக் குறித்தல். இதில் வட்டு இயக்கி, தரவு குறிப்பேட்டுப் பெயர், கோப்புப் பெயர் போன்றவை அடங்கும். file storage : கோப்பு சேமிப்பகம் : மின் காந்த வட்டு, நாடா, அட்டை அலகுகள் போன்ற கணினி அமைப்புக்குள் ஏராளமான தரவுகளை வைத்திருக்கும் திறனுள்ள சாதனங்கள். file store : கோப்புச் சேமிப்பு. file structure : கோப்பு வடிவமைப்பு : கோப்புக் கட்டமைப்பு : ஒரு தரவு பதிவுக்குள் புலங்களின் அமைப்பு முறை. சான்றாக, ஒரு பதிவின் முதல் புலம் பெயர்ப்பகுதியாகவும், அதன் இரண்டாவது எண் புலம் விலைப் பகுதியாகவும் அடுத்து மூன்றாவது என்று தொடர்ந்து சென்று கோப்பின் வடிவ அமைப்பினைக் கூறுகிறது. file system : கோப்பு முறை ; கோப்பமைவு முறை : ஒரு கணினிப் பொறியமைவில் கோப்புகளைப் பட்டியலிடும் முறை. தனித்தனிக்கோப்புகளை மேலாண்மை செய்கிற தரவு செய்முறைப்படுத்தும் பயன்பாடு. இதில் பழக்கப்பட்ட செயல்முறைப்படுத்துதல் மூலம் கோப்புகள் தொடர்புபடுத்தப்படுகின்றன. இது, தொடர்முறைச் செய்தித் தரவு தளத்திலிருந்து (Relational Database) வேறுபட்டது. file transfer : கோப்பு மாற்றல்; கோப்புப் பெயர்வு : ஒரு இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கோ அல்லது ஒரு சேமிப்பு ஊடகத்திலிருந்து வேறொன்றுக்கோ கோப்பினை மாற்றுதல். அணுகலும் மேலாண்மையும். file transfer protocol : கோப்புப் பெயர்வு வரைமுறை; கோப்புப் பரிமாற்று வரைமுறை. file type : கோப்பு வகை : ஒரு கோப்பின் செயல்பாட்டு அல்லது கட்டமைப்புப் பண்புக்கூறுகளின் அடிப்படையில் கோப்பு வகைகள் அமைகின்றன. பெரும்பாலும் ஒரு கோப்பின் வகை அதன் பெயரைக்கொண்டே அடையாளம் காணப்படுகிறது. எம்எஸ்டாஸில் கோப்பின் வகைப்பெயர் (Extension) கோப்பின் வகையை அடையாளம் காட்டும். (எ-டு) DBF-தரவுத்தள கோப்பு; EXE-இயக்குநிலைக் கோப்பு. file update : கோப்பு இற்றை நிலைப்படுத்துதல்; கோப்பு புதுக்குதல். file viewer : கோப்புப் பார்வையாளர் : ஒரு கோப்பின் உள்ளடக்கத்தைக் கண்காட்சியாகக் காட்டுகிற மென்பொருள். இது, பொதுவாக உருவமைவுகளின் ஒருவகையைக் கண்காட்சியாகக் காட்டும் திறனுடையது. file virus : கோப்பு நச்சுநிரல். fill : நிரப்பு : ஒர் ஒவியச் செயல் முறையில், கரையிட்ட பகுதியில் வண்ணத்தை மாற்றுதல். ஒர் அகல் தட்டில் பொதுவான அல்லது மடிநிலை மதிப்பளவுகளை சிற்றங்களின் ஒரு குழுமமாகப் பதிவு செய்தல். fill area : நிரப்புப் பகுதி : முனைகளைக் குறித்துரைத்து ஒரு மூடிய பலகோணக் கட்டத்தை வரைந்து, பின்னர் அதன் உட் பகுதியை நிரப்புகிற ஒரு வசதி. fill character : நிரப்பு எழுத்து : ஒரு சேமிப்புச் சாதனத்தில் பயன்படாத இடப்பரப்புகளில் எழுதப்படும் ஓர் எழுத்து. filling : நிரப்புதல் : கணினி வரைகலையில், வரையறுக்கப்பட்ட பகுதியின் உட்புறத்தில் நிறம், சாயல் அல்லது இயக்குபவர் விரும்புகின்றவற்றை இட்டு நிரப்பப் பயன்படும் ஒரு மென்பொருள் செயல்பாடு. fill in screen : நிரப்புத் திரை : ஒரு தரவுப் பதிவுத் திரை. இதில் தரவுப் பதிவு முனைகளாகப் பல பெட்டிகள் அல்லது கம்பித் தொடர்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு தரவு முனையும் ஒரு தருக்க முறைப்படி அமைந்து, எந்த தரவு இனம் எங்கே செல்லவேண்டும் என்பதைக் குறிக்கும் முகப்புச் சீட்டையும் கொண்டிருக்கும். இந்த வகை நிரப்புத்திரை பெரும்பாலும் விமான பயணச் சீட்டு முன்பதிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் "தரவு பதிவுத் திரை" (Data Entry Screen) என்றும் கூறுவர். fill pattern : நிரப்புத் தோரணி : ஒர் உருக்காட்சியின் பரப்புப் பகுதியை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் வண்ணம், வண்ணச்சாயல் அல்லது தோரணி. ஒரு LAN நிலையம் தகவல்களைப் பெறாதிருக்கிறபோது அல்லது அனுப்பாதிருக்கிறபோது ஒருங்கிணைப்பைப் பேணுவதற்காக அந்த நிலையத்தினால் அனுப்பப்படும் குறியீடுகள். film : படச்சுருள். சாதனங்களுக்காக நுண் திரைப்படத்தினை மாற்றி அமைக்கும் கருவி. film reader : படச்சுருள் படிப்பி . film recorder படச்சுருள் பதிப்பி : ஒரு CAD, வண்ண அல்லது வணிக வரைகலைத் தொகுதி மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஒரு வரைகலைக் கோப்பிலிருந்து ஒரு 35மி. மீ. பட வில்லையைத் தயாரிக்கிற சாதனம். இது, 2, 000 முதல் 4, 000 வரையிலான வரிகளைக் கொண்ட உயர்செறிவுப் படங்களை உருவாக்குகிறது. படச்சுருள் பதிப்பியுடன் இணைக்கப் பட்டுள்ள ஒரு கட்டுப்பாட்டுப் பலகையில் செருகுவதன் மூலம் சொந்தக் கணினிகளுடன் படச்சுருள் பதிப்பிகளை இணைக்கலாம். FILO : ஃ பைலோ : First in Last out என்பதன் குறும்பெயர். ஒரு பட்டியல், மேசை அல்லது அடுக்கிலிருந்து வகையறாக்களைத் திரும்ப எடுப்பதற்கோ அல்லது அவற்றில் சேமிப்பதற்கோ கடைப்பிடிக்கப்படும் முறை. முதலில் சேமிக்கப்படும் பொருளைக் கடைசியில்தான் வெளியில் எடுக்க முடியும். — file maintenance
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கோப்புப் பேணல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 587)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pztvyvzy/

தமிழ்
“கோப்புப் பேணுகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pztvyvzy/
APA
Oliyon Research. (2026). கோப்புப் பேணுகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pztvyvzy/
MLA
"கோப்புப் பேணுகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pztvyvzy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment