இடையெழு வள்ளல்களுள் ஒருவன். வரையாது வழங்கி வரலாற்றிலும் புராணங்களிலும் இடம் பெற்றுத் திகழும் வள்ளல்கள் சிலரைத் தொகைப்படுத்தித் தலைஎழுவள்ளல், இடையெழுவள்ளல், கடையெழுவள்ளல் என்று கூறுவது மரபு. எழினி முதலாகக் கூறப்படும் கடை எழு வள்ளல்கள் எழுவரும், சங்க காலத்தில் சிறந்த வள்ளல்களாய் வாழ்ந்த வரலாற்று மக்களாவர். முதல், இடை ஆகிய இருவகையில் அடங்குபவர்கள் புராண இதிகாச மாந்தர்கள். இடையெழு வள்ளல்களின் பெயர்கள் வருமாறு:– அக்குரூரன், அந்திமான், அரிச்சந்திரன், கன்னன், சந்திமான், சிசுபாலன், தந்த வக்கிரன்.