கலை

kalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது, நுணுக்கமாக வெளிப்படுத்தும் திறன் — art, Male black monkey, a species of deer, River portia tree, Indian hour equals to ¹⁄60 of a pākai, Pārvatī, A kind of camphor imported from Kalah in the Malay Peninsula, Core, solid part of timber, Woman's girdle consisting of seven strands of jewels, shark, Capricorn of the Zodiac, cloth, garment, sddle of a horse, portion, Moon's phase corresponding to a titi, brightness, splendour, Minute portion of time about 8 seconds, learning, erudition, treatise, book, language, Part of a vaṇṇam, Speci
ஓவியம்,சிற்பம், சிலம்பாட்டம், மொழி போன்ற பல கலை என்பதற்குள் அடங்கும்
கலை உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் (வள்ளலார்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
2.
ஆண் கருங்குரங்கு. (தொல். பொ. 601, உரை.)
பயிலிருஞ் சிலம்பிற் கலைபாய்ந்து உகளவும் (புறநானூறு, 116)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
3.
கலைமான்
வன்கலை தெவிட்டும் அருஞ்சுரம் இறந்தோர்க்கு (புறநானூறு, 161)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
4.
காஞ்சிமரம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
5.
பாகையின் அறுபதிலொன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
6.
பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
7.
மலேசியாவின் கர்ப்பூரவகை. (சிலப். 14, 109, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
8.
மரவயிரம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
9.
மேகலை காஞ்சியென்னும் இடையணிகள் ()
வாமாண் கலைசெல்ல நின்றார் (திருக்கோவிலூர் கலம்பகம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
10.
சுறாமீன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
11.
மகரராசி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
12.
சீலை
அருங்கலை யயலுற (பாரத. குருகுல. 57)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
13.
குதிரைச் சேணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
14.
அமிசம், பாகம்
தத்துவக் கலையினில் (ஞானா. 1, 26)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
15.
நிலவின் பதினாறு நிலைகள்
வெண்மதியி னொற்றைக் கலைத்தலை யாய் (திருவாச. 6, 40)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
16.
ஒளி
நிறைகலை வீச (அரிசமய. பத்திசார. 106)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
17.
ஒரு கால அளவு, ஏறத்தாழ எட்டு நொடிகள். (கூர்மபு. பிரமாவி. 3.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
18.
கல்வி. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
19.
சாத்திரம்
கலை நவின்ற பொருள்களெல்லாம் (திருவாச. 12, 13)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
20.
மொழி
தென்கலையே முதலுள்ள பல்கலை (கந்தபு. நகரப். 49)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
21.
வண்ணப் பாட்டின் ஒரு பாகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
22.
வித்தியாதத்துவம் ஏழனுள் ஒன்று
கலைமுதலாயநிலை மலி தத்துவம் (ஞானா. 3, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
23.
இடைகலை, பிங்கலை ஆகிய மூச்சின் வகைகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
24.
உடல்
கலையிலாளன் (சிலப். 10, 28)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
25.
புணர்ச்சிக் குரிய கரணங்கள். (சீவக. 1625, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
26.
மரக்கவடு. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
27.
ஆண்மான்
கவைத்தலை முதுகலை (தொல். பொ. 600, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
28.
நீக்கு
கருவைக் கலைக்கக் கூடாதுன்னு மருத்துவர் கூறிவிட்டார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
29.
குலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலை)
30.
ஆண் குரங்கு, மகரமீன், மேகலை, சாமர்த்தியம், சந்திரன், அம்ஸம், கால நுட்பம், நூல், சரீரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 117)
31.
உலகப்பகுதிகள். சுத்த மாயையின் காரியம், அத்துவா 6 இல் ஒன்று.ஆயகலைகள் 64 என்பது ஒருவழக்கு, தத்துவ முறைப்படி அது ஆறு வித்தை, அராகம், காலம்,நியதி, புருடன், மாயை. பொதுவாகக் கலையில் அழ குணர்ச்சி முந்தி, அறிவு பிந்தி,கன்மத்திற்குப்பின் தோன்றி, ஆணவத்தை ஒதுக்கிச் சித்தின் செயல்புரி கிரியா சத்தியைத் தெரிவிப்பது மந்திரம்,பதம்,வன்னம், புவனம்,தத்துவம் ஆகியவற்றைத் தன்னுன் அடக்கியது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 94)

தொகுதிகள் · Categories: விலங்குகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pwk4atvj/

தமிழ்
“கலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pwk4atvj/
APA
Oliyon Research. (2026). கலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/pwk4atvj/
MLA
"கலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pwk4atvj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment