வைய விரி வலை
vaiya viri valai
பொருள்கள் · Senses
1.
உலக முழுவதிலுமுள்ள ஹெச்டீடீபீ வழங்கன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள, ஒன்றோடொன்று தொடர்புடைய மீத்தொடுப்பு ஆவணங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு. வைய விரிவலையிலுள்ள ஆவணங்கள் வலைப்பக்கங்கள் எனப்படுகின்றன இவை ஹெச்டீஎம்எல் மொழியில் எழுதப்பட்டவை. இவை யூஆர்எல் மூலம் அடையாளம் காணப்படுகின்றன. ஹெச்டீடீபீ நெறிமுறை மூலம் இவை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்குப் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இவற்றில் மீத்தொடுப்புள்ள சொல் / சொல் தொடர் மீது சுட்டியால் சொடுக்க அதனால் சுட்டப்படும் இன்னோர் ஆவணம் பயனாளருக்குக் கிடைத்துவிடுகிறது. அந்த இன்னோர் ஆவணம் ஒரு வரைகலைப் படமாகவோ, ஒலி, ஒளிக்காட்சிக் கோப்பாகவோ, ஜாவா குறுநிரலாகவோ, ஆக்டிவ் எக்ஸ் இயக்குவிசையாகவோ இருக்கலாம். வலப்பக்கங்களைப் பார்வையிடும் பயனாளர் எஃப்டீபீ வழங்கனிலிருந்து கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மின்னஞ்சல் அனுப்பலாம். ஐரோப்பிய நுண் துகள் இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் (European Laboratory for Particle Physics - CERN) பணி புரிந்த டிமோத்தி பெர்னர்ஸ் - லீ (Timothy Berners - Lee) என்பவர் 1989 ஆம் ஆண்டில் வைய விரிவலையை உருவாக்கினார்
— World Wide Web or World-wide web (WWW)
2.
உலக முழுவதிலுமுள்ள ஹெச்டிடீபீ வழங்கன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள, ஒன்றோடொன்று தொடர்புடைய மீத்தொடுப்பு ஆவணங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு. வைய விரிவலையிலுள்ள ஆவணங்கள் வலைப்பக்கங்கள் எனப்படுகின்றன. இவை ஹெச்டிஎம்எல் மொழியில் எழுதப்பட்டவை. இவை யூஆர்எல் மூலம் அடையாளம் காணப்படுகின்றன. ஹெச்டிடீபீ நெறிமுறை மூலம் இவை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்குப் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இவற்றில் மீத்தொடுப்புள்ள சொல்/சொல் தொடர்மீது சுட்டியால் சொடுக்க அதனால் சுட்டப்படும் இன்னோர் ஆவணம் பயனாளருக்குக் கிடைத்து விடுகிறது. அந்த இன்னோர் ஆவணம் ஒரு வரைகலைப் படமாகவோ, ஒலி,ஒளிக்காட்சிக் கோப்பாகவோ, ஜாவா குறுநிரலாகவோ, ஆக்டிவ்எக்ஸ் இயக்குவிசையாகவோ இருக்கலாம். வலப்பக்கங்களைப் பார்வையிடும் பயனாளர் எஃப்.டீ.பீ வழங்கனிலிருந்து கோப்புகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மின்னஞ்சல் அனுப்பலாம். ஐரோப்பிய நுண்துகள் இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் (European Laboratory for Particle Physics CERN) பணிபுரிந்த டிமோத்தி பெர்னர்ஸ் - லீ (Timothy Berners - Lee) என்பவர் 1989-ஆம் ஆண்டில் வைய விரி வலையை உருவாக்கினார் World Wide Web Consortium: வைய விரிவலைக் கூட்டமைப்பு : வைய விரி வலை தொடர்பான அனைத்துப் பிரிவுகளிலும் நடைபெறும் ஆய்வு களைக் கண்காணித்து சிறந்த தரக் கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வணிக மற்றும் கல்வி நிறுவனங் களின் கூட்டமைப்பு. சுருக்கமாக டபிள்யூ3சி(W3C) என்றழைக்கப்படும்.
— World Wide Web or World-wide Web
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pttu3xrq/
தமிழ்“வைய விரி வலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pttu3xrq/APA
Oliyon Research. (2026). வைய விரி வலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pttu3xrq/MLA
"வைய விரி வலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pttu3xrq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment