செய்வழிக் கட்டப் படம், கணிப் பொறி
ceyvaḻik kaṭṭap paṭam, kaṇip poṟi
செய்யப் பட வேண்டிய ஒரு செயலின், பல படிகளை அவற்றின் தரத்திற்கேற்றவாறு பிரித்து அமைத்த நிலையைக் காட்டும் ஒரு விளக்கப் படத்திற்குச் செய் வழிக் கட்டப் படம் (flow chart) என்று பெயர்.
செய்யப் பட வேண்டிய ஒரு செயலின், பல படிகளை அவற்றின் தரத்திற்கேற்றவாறு பிரித்து அமைத்த நிலையைக் காட்டும் ஒரு விளக்கப் படத்திற்குச் செய் வழிக் கட்டப் படம் (flow chart) என்று பெயர். ஒவ்வொரு செயலும் அல்லது செயலின் ஒவ்வொரு பகுதியும், பட விளக்கமாகத் தனித் தனிப் பெட்டியில் காண்பிக்கப்படும். அப்பெட்டியின் அமைப்பு செய்யப் பட வேண்டிய செயலின் தரத்திற்கேற்ப அமையும். பொதுவாக ஒரு செய்வழிக் கட்டப் படம் “தொடங்குக” என்று குறியிட்ட பெட்டியில் தொடங்கி, “நிறுத்துக” என்று குறியிட்ட பெட்டியில் முடியும். இவ்விரு பெட்டிகளும், நீள் வட்ட வடிவப் பெட்டிகளாக இருக்கும். ஓர் எளிய செயல், நீள் சதுர அல்லது சதுரப் பெட்டியில் குறிக்கப் படும். ஒரு செயலின் உள்ளீடும், வெளியீடும் பொதுவாக, சாய் சதுர வடிவப் பெட்டிகளாகக் குறிக்கப் படும். செயல்களை வரிசைப் படுத்த அப்பெட்டிகளுக்கிடையில் அம்புக்குறிகள் பயன்படும்.
A, B, C என்னும் மூன்று எண்களைக் கூட்டுவதற்கான செய்வழிக் கட்டப் படம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு விற்பனையாளர் 50 ஆடைகளை ஒரு பெட்டியிலிருந்து எடுத்து, அவற்றைக் காட்சிக்கு வைப்பதாகக் கொண்டால், இச்செயலுக்குச் செய்வழிக் கட்டப் படம் பின்வருமாறு அமையும்.
இம்முறையை 50 முறை பின்பற்றினால், மேலே கொடுக்கப்பட்ட செயலை அவர் செய்து முடிக்கக் கூடும். ஆனால், இது ஒரு சரியான செய்வழிக் கட்டப் படம் தயாரிப்பதற்கான முறையாகாது. எனவே பின் வரும் சுருக்கமான முறையைப் பின்பற்ற வேண்டும்.
இரண்டாம் முறை, முதல் முறையை விட எளிதானதும், சிறந்ததுமாகும். செயல்களின் வரிசை, வளையங்களாகப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை முறை இச்செயலைச் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகக் குறிக்கவில்லை. எனவே, மேற்காணும் செயல் முறை விளக்கப் படத்தின் அமைப்பில் எண்ணிக்கை குறிக்க வேண்டும்.
N என்னும் ஒரு திட்டம் செயல்படும் போது, மாறும் தன்மையைக் கொண்டது. N = 0 என்னும் நிலையில் தொடங்கி, N இன் மதிப்பை ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றாகக் கூட்டிக் கொண்டே செல்ல வேண்டும். இப்பொழுது எண்ணியின் அமைப்பு, பின் வருமாறு அமைகிறது.
மதிப்பு மாறுதலடைந்த பெட்டி அச்செயலைச் செய்ய வேண்டிய முறைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. இதை முந்தைய செய்வழிக் கட்டப் படத்துடன் இணைக்க வேண்டும்.
இச்செய்வழி கட்டப் படம் முந்தையதை விடச் சிறந்த முறையில் அமைந்துள்ளது. ஏனெனில், எத்தனை முறை ஒரு செயல் செய்யப்பட வேண்டும் என்பதற்கான விளக்கம் இதில் அமைந்துள்ளது. இருப்பினும், வெளி வருவதற்கான வழியும், செயலை முடிப்பதற்கான வழியும் இல்லாமையால், இது செய் வழிக் கட்டப் படம் ஆவதில்லை. எனவே, செயலை நிறுத்துவதற்கு ஒரு முடிவுப் பெட்டியை இணைக்க வேண்டும்.
முடிவுப் பெட்டி என்பது சாய் சதுர வடிவப் பெட்டியாகும். அதில் ஆம் அல்லது இல்லை என்னும் விடையைத் தரக் கூடிய வினாப் பகுதி ஒன்று இருக்கும். அவ்வினாவிற்கான விடை ஆம் எனில், செயல் நிரல் காட்டி ஒரு திசையிலும், இல்லையெனில், அது வேறு திசையிலும் பிரிந்து செல்லும்,
முடிவுப் பெட்டியைச் சேர்த்த பிறகு செய்ய வேண்டிய செயலின் செய்வழிக் கட்டப் படம் படம் 7இல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலே காணும் செய்வழிக் கட்டப் படம் ஒரு பெட்டியிலிருந்து, 50 ஆடைகளை எடுத்து, அவற்றைக் காட்சிக்கு வைக்க வேண்டிய செயல் முறையைக் குறிக்கிறது. ஒரு பெட்டியிலிருந்து, 200 ஆடைகளை எடுத்துக் காட்சிக்கு வைக்க வேண்டிய செயல் முறையைக் குறிப்பிட வேண்டுமென்றால், தனியாக ஒரு செயல் நிரல் காட்டியைத் தயாரிக்க வேண்டிய தேவையில்லை. முடிவுப் பெட்டியில் N = 200 என்று குறித்தாலே போதும். இவ்வாறாகப் பெட்டியிலிருந்து, எத்தனை ஆடைகளை எடுத்துக் காட்சிக்கு வைத்தாலும், அதற்கென்று தனியாக ஒரு செயல் முறை விளக்கப் படம் தயாரிக்க வேண்டியதில்லை.
பொதுவாக ஒரு செயலுக்கான செயல் முறை விளக்கப் படத்தைத் தயாரிக்கும் போது, பின் வரும் முறைகளைக் கொள்ள வேண்டும்.
அச்செயலைச் சிறு சிறு செயல்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். தொடங்குக (start), உள்ளீடு (input), செயல்கள் (operation), வெளியீடு (output), நிறுத்துக (stop) இவற்றைத் தனித் தனி அமைப்புகளாகக் குறித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சிறு செயலை யும், அதன் தரத்திற்கேற்ப வரிசைப் படுத்த அம்புக் குறிகளைப் பயன் படுத்த வேண்டும்.
கணிப் பொறித் திட்டங்களின் செய்வழிக் கட்டப் படங்கள். கொடுக்கப்பட்ட கணக்கை ஒரே முறை- யாகச் செய்ய கணிப் பொறியால் முடியாது. கணிப் பொறியில் கொடுக்கப் படும் செய்திகள் எளிய எண் கணிதச் செயல்களைக் கொண்ட, சிறு எளிய அடிப்படை எண் கணிதச் செயல்களை மட்டும் செய்யக் கூடியதாகும். வரிசைப் படுத்தப்பட்ட சார்புடைய செய்திகளை உள்ளடக்கிய கணிப் பொறியில் நினைவு மண்டலம் (memory centre) என்னும் பகுதி ஒன்று உள்ளது. ஒரு குறிப்பிட்ட தீர்விற்குத் தேவையான சார்புடைய செய்திகளை உள்ளே செலுத்த வேண்டும். கணிப் பொறி படிப்படியாக எடுத்துக் கொள்ளும் செய்திகளுக்குத் திட்டம் (programme) என்று பெயர்.
தீர்க்க வேண்டிய கணக்கு அல்லது தீர்விற்குத் தயாரிக்கும் திட்டமும், அதற்கான செய்முறை எண் கணிதச் செய்திகளும், கணிப் பொறி புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் கொடுக்கப்பட வேண்டும். ஒரு கடினமான கணக்கைத் தீர்ப்பதற்குத் தயாரிக்கும் திட்டம், பற்பல செய்திகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதற்குச் செயல் நிரல் காட்டி, கணிப் பொறியைப் பயன்படுத்துபவருக்கு மிகவும் இன்றியமையாதது.
y = ax + b என்னும் சமன்பாட்டில், y–இன் மதிப்பைக் கணக்கிட வேண்டும். a, b, x இவற்றின் மதிப்புகள் செய்திகளாகக் கணிப் பொறியில் செலுத்தப் பட வேண்டும். இச்சமன்பாடு கூட்டல், பெருக்கல் என்னும் எளிய செயல்களைக் கொண்டு அமைந்துள்ளமையால், இதை ஒரு குறிப்பாகக் கொடுக்கலாம். பிறகு y-இன் மதிப்பைக் கூறும்படி, கணிப் பொறியைக் கேட்கலாம். பின்னர், குறிப்பிட்டுள்ள செய்வழிக் கட்டப் படத்தில் இந்தச் செயல்கள் குறியீடுகளால் குறிப்பிடப்பட்டுள்ளன.
210–இன் மதிப்பைக் கணக்கிடுவதற்கான செய்வழிக் கட்டப் படம். இதை வாய் மொழியாகச் செய்யும் போது, 2, 4, 8, 16,…… என்று ஒவ்வொரு முறையும், முந்தைய எண்ணை 2ஆல் பெருக்கிக் கொண்டே செல்ல வேண்டும். இவ்வாறாக நினைக்கும் எண்ணை R எனவும், எண்ணும் எண்ணை C எனவும் கொண்டால், 210 R–இன் தொடக்க மதிப்பை 2 எனவும், C–இன் தொடக்க மதிப்பை 1 எனவும் எடுத்துக் கொள்ள வேண்டும். R–இன் மதிப்பை இரட்டையாக்கக் கிடைப்பது R = 2 X R C–இன் மதிப்பை ஒன்று மிகுதிப்படுத்தக் கிடைப்பது C = C + 1 C–இன் மதிப்பு 10 என்பதை ஆய்ந்து பார்க்க வேண்டும். ஆம் எனில் ஐந்தாம் படிக்குச் செல்லலாம். இல்லையெனில், நான்காம் படியின் மூலமாக இரண்டாம் படியை மீண்டும் தொடங்க வேண்டும். R–இன் மதிப்பைக் குறிப்பிட வேண்டும்.
இரண்டாம் படியை ஒவ்வொரு முறையும் செய்யும் போது, R–இன் மதிப்பு 2 மடங்காகிறது (முந்தைய மதிப்பிற்குப் பதிலாக அதன் 2 மடங்கு என்ற புதிய மதிப்பைப் பிரதியிட வேண்டும்). இதே போல், C = C + 1 என்பது C இன் மதிப்பு ஒன்று கூடுகிறது என்பதைக் குறிக்கிறது.
மேற்காணும் கணக்கீட்டிற்கானசெய்வழிக் கட்டப் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்வழிக் கட்டத்தின் செயல் முறைகள் கீழ்க் காணுமாறு நடை பெறுகின்றன. இதில் R, C என்னும் இரு குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. R என்னும் குறியீடு தொடர்ந்து எண்களை 2ஆல் பெருக்குவதற்கும், C என்னும் குறியீடு பெருக்கலின் எண்ணிக்கையைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படும். R,C என்ற குறியீடுகளில் தகுந்த எண்களைப் பிரதியிடுதலைக் கொண்டு, இத்திட்டம் செயல்படுதலைச் சரி பார்க்க வேண்டும்.
முடிவாகக் கிடைக்கும் எண் 10, 1024. அதாவது, 210–1024.
கொடுக்கப்பட்ட எண்களில் மிகப் பெரிய எண்ணைக் காண்பதற்கான செய்வழிக் கட்டப் படம். A₁, A₂, A₃……,An என்பன கொடுக்கப்பட்ட n எண்கள் ஆகும். இவற்றில் மிகப் பெரிய எண்ணைக் காணச் செயல் நிரல் காட்டியைத் தயார் செய்வதற்கான முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
முதல் எண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை 2ஆம் எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இவ்விரு எண்களில் முதல் எண் பெரியது என்றால், அல்லது இவை இரண்டும் சமம் என்றால், முதல் எண்ணை மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் இரண்டாம் எண் பெரியது என்றால், இரண்டாம் எண்ணை மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தக்க வைத்துக் கொண்ட எண்ணைப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள அடுத்த எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 5ஆம் படியின் வழியாக 3 ஆம் படியைப் பட்டியலில் உள்ள இறுதி எண்ணைத் தக்க வைத்துக் கொண்ட எண்ணுடன் ஒப்பிடும் வரை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.
இம்முறையைக் குறிப்பதற்கான சரியான முறை இயற் கணித வடிவமாகும். செயலைத் தவற விடாமல் இருப்பதற்காக, 3 என்ற எண்ணியைப் பயன்படுத்த வேண்டும். எண்கள் ஒப்பிடப்பட்டுப் பெரிய எண் ஒப்பிடப்பட்ட இடத்தை Z எனக் கொள்ள வேண்டும். இம்முறை பின்வருமாறு அமைகிறது.
Z = A எனக் கொள்ளலாம். J = 2 எனக் கொள்ளலாம். J > N எனில், கணக்கிடுவதை நிறுத்தி விட்டு, 8ஆம் படிக்குச் செல்லலாம். இல்லை எனில், 4ஆம் படிக்குச் செல்லலாம். Z < Aj எனில், 5ஆம் படிக்குச் செல்லலாம். இல்லை எனில், 6ஆம் படிக்குச் செல்லலாம். Z = Aj என்று அமைத்துக் கொள்ளலாம். Jஇன் மதிப்பை ஒன்று அதிகப் படுத்த கிடைப்பது 3ஆம் படிக்குச் செல்லலாம். Zஎன்பது தேவையான எண்ணாகும். இதன் செய்வழிக் கட்டப் படம், படம் 10 இல் கொடுக்கப் பட்டுள்ளது.
—பெ. துரைசாமி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 777)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/presxv6n/
தமிழ்“செய்வழிக் கட்டப் படம், கணிப் பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/presxv6n/APA
Oliyon Research. (2026). செய்வழிக் கட்டப் படம், கணிப் பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/presxv6n/MLA
"செய்வழிக் கட்டப் படம், கணிப் பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/presxv6n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment